சில வருடங்களாக நமக்கு அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது வாடிக்கையாகிவிட்டது, அக்ஷய திருதியை, தங்கநகை சீட்டு என ஏதாவது ஒரு விதத்தில் தங்கத்தை சேமிப்பதும் அதில் முதலீடு செய்வது என்பதும் வருங்கால அவசிய தேவைகளுக்கு ஏற்ற நல்ல ஒரு பாதுகாப்பான முதலீடாகவே அக்காலத்தில் இருந்து இன்றுவரை பார்க்கப்படுகிறது ஆனால் அன்று வெண்மை நிற பொருட்களை வாங்க வேண்டும் வெண்மை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதையே சாஸ்திரம் சொல்கிறது. அக்ஷய திருதியை அன்று நல்ல கெட்டி தயிரில் மாங்காய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதத்தை அன்னதானம் செய்தால் அது நமக்கு சிறந்த புண்ணியத்தை தரும் அதுவும் பலர் உணவில்லாமல் கஷ்ட்டப்படும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் செய்யப்படும் அவர்களுக்கு செய்யப்படும் இந்த அன்னதானம் கோடி புண்ணியத்தை நமக்கு பெற்றுதரும் என்பது உறுதி. அது சரி நாம் அக்ஷய திருதியை அன்று தவறாமல் தங்கம் வாங்கி பழகிவிட்டோம் தற்போது தங்க நகைக்கடைகளை வேறு மூடியுள்ளார்கள் எப்படி வாங்குவது என்பவர்களுக்கு ஒரு இனிய செய்தி அன்று நாம் தங்கம் வாங்கலாம் bஅதுவும் 24 கேரட் அசல் தங்கம், செய்கூலி, சேதாரம், வரிகளுடன் நாம் கடைவில் வாங்குவதை விட சுமார் 10% குறைந்த விலையில் வாங்கலாம், இதற்கு 2.5% வட்டியும் கிடைக்கும், முதலீட்டு வரியும் கிடையாது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். நம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சவரின் கோல்ட் பாண்ட் எனப்படும் தங்க முதலீட்டு திட்டம்தான் அது. இதில் மேற்கண்ட அனைத்து சலுகைகளும் உண்டு என்பதுடன் இதை லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. மேலும் இதனை பற்றி விவரமாக அறிய நமது விஜயபாரதம் இணையதளத்தில் தங்க முதலீட்டு ஆலோசகர் திரு கயிலை ராஜன் அவர்கள் எழுதிய கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளலாம்.
தங்கத்தில் முதலீடு தங்கமான முதலீடு: உலக அளவில் தங்கக்த்தை அதிகம் நேசிக்கும் தேசம் நம் இந்தியா தான். தங்கம் விலை என்ன தான் ஏற்ற இறக்கம் கண்டாலும் மக்கள், தங்கத்தை வாங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஏதோ லாக் டவுன் என்பதால் தற்போது தங்க வியாபாரம் கொஞ்சம் டல்லடித்து இருக்கிறது. இந்த லாக்டவுனில், அக்சயதிரியைக்கு, தங்கத்தை குறைந்த விலைக்கு வீட்டில் இருந்த படி வாங்க முடியுமா..? முடியும் என்பது தான் பதில். எப்படி வாங்கலாம்??? இந்திய அரசின் GSB, Gold Sovereign Bond, திட்டம், மிகவும் அருமையான திட்டம். இது என்ன என்பதைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம். கடையில் தங்கம் வாங்கப் போனால், நாம் வியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கும் விலையை விட கூடுதல் விலைக்கு தான் வாங்க முடியும். காரணம் ஜிஎஸ்டி, செய் கூலி, சேதாரம் என நாம் கொடுக்க வேண்டியது இருக்கும்.
பொதுவாக தங்க நகைகளுக்கு 2% வரை செய்கூலி கணக்கிடுகிறார்கள். அதே போல சேதாரம் நாம் வாங்கும் நகைகளைக் பொறுத்து 6% முதல் 10% , 15%, 25% வரை நாம் வாங்கும் நகைக்கு ஏற்ப வசூலிக்கிறார்கள். தங்க விலையின் மேல் சராசரியாக 10 % கூடுதலாக நாம் பணம் கொடுக்க வேண்டி வரும். இது போக தங்கத்தின் மீது GST, சரக்கு மற்றும் சேவை 3 % கொடுக்க வேண்டும். ஆனால், இந்த இந்திய அரசு தங்க திட்டத்தில், 3 % GST வரி கூட, நாம் தங்கத்துக்கு செலுத்த வேண்டாம். தங்கத்துக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும்.
அரசாங்கமா இப்படி தங்கம் தருகிறது? என்று கேட்கிறீர்களா. ஆம். அந்த திட்டத்தின் பெயர் Sovereign Gold Bond.(GSB) இந்த திட்டம் இந்திய அரசின் தங்க பத்திரம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் அதை Sovereign Gold Bond என்பார்கள். அந்த அளவுக்கு இதில் பாதுகாப்பு அம்சங்களும், வருமானமும் இருக்கின்றன. இந்த தங்க பத்திரம் வாங்கினால் நீங்கள் தங்கம் வாங்கியதற்கு சமம். சொல்லப் போனால் தங்கத்தை விட ஒரு படி மேல். எப்படி இரண்டும் சமம் நீங்கள் தங்கத்தை வாங்கினால் என்ன செய்வீர்கள்..? கடையில் அடகு வைப்பீர்கள், அவசர பணத் தேவைக்கு வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவீர்கள். இந்த வேலைகளை எல்லாம், தங்க பத்திரம் வைத்துக் கொண்டும் செய்யலாம். சொல்லப் போனால் தங்க பத்திரம் சுத்தமான தங்கமா என உரசிப் பார்க்க வேண்டிய வேலையே கிடையாது. தரத்தை பற்றி கவலையே பட வேண்டாம்.
தங்க பத்திரம், அரசு விளம்பரங்களில் சொல்லப்பட்டு இருப்பது போல அது ஹால்மார்க் 24 கேரட் சுத்த தங்கத்துக்கு சமம். அதாவது 99.99% தூய்மை . ஆர்பிஐ இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) இந்திய அரசு சார்பாக வெளியிடுகிறார்கள். வங்கிகள் மூலம் விற்கப்படுகிறது. அன்றைய LBA, London Bullion Association விலைக்கு ஏற்ப, இறக்குமதி வரி 12.5% சேர்த்து, India Bullion and Jewelers Association Limited வெளியிடும் 999 சுத்தமான தங்கத்தின் விலைக்கு ஏற்ப, இந்த Sovereign Gold Bond-ன் விலையை RBI நிர்ணயிக்கிறது. தற்போது 2020 – 21 சீரிஸ் 1 தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond), 2020 ஏப்ரல் 20 முதல் 24 வரை வெளியிடுகிறார்கள். இந்த பேப்பர் தங்கம் வாங்கியவர் கணக்குக்கு பத்திரங்கள் வந்துவிடும். இது போக 2020 ஆகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் தங்க பத்திரங்களை வெளியிட இருக்கிறார்களாம்.
தற்போது RBI, இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு கிராம் 99.99, 24 Karat தங்கத்தை 4,639 ரூபாய்க்கு வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond), ஆன்லைன் வழியாக இந்த வாங்கினால், கிராமுக்கு 50 ரூபாய் இன்னும் குறைவாக வாங்கலாமாம். அதாவது 4,589 ரூபாய்கு தங்கத்தை வாங்கலாம். அதோடு தங்க நகைகளைப் போல திருடு போகும் என்கிற பயம் தேவை இல்லை. நாம் வாங்கும் தங்க பத்திரத்தை (Sovereign Gold Bond) யாராவது திருடிச் சென்றாலும், அவர்களால், அதை பணமாக்க முடியாது. எப்படியும் தங்க பத்திரங்களை நாம் வாங்கிய வங்கிகள் மூலம் வேறு பாண்டுகள் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் பாதுகாப்பு மிகவும் அதிகம். லாக்கர் செலவு , இன்ஞரன்ஸ் போன்ற பாதுகாப்பிற்க்கான செலவுகள் இல்லை.
இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே வாங்க முடியும். தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர்கள், ட்ரஸ்டுகள், பல்கலைக்கழகங்கள் & தான தர்மங்களைச் செய்யும் அமைப்புகள் (Charitable trust) இந்த தங்க பத்திரங்களை வாங்கலாம். தனி நபர்கள் தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கிப் போடலாம். தனி நபர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம். குறிப்பாக மைனர்கள் பெயரில் கார்டியன்களும் வாங்கலாம். தங்க பத்திரத்தில் (Sovereign gold Bond) முதலீடு செய்ய விரும்புபவர், எங்கும் அலையாமல் தங்கள் ஆன்லைன் பேங்கிங் முறையிலேயே விண்ணப்பிக்கலாம். உதாரணமாக SBI, CUB வங்கியின் ஆன்லைன் பேங்கிங் முறையில், Log in செய்த பின், Offers, GSB என்கிற TAB கீழ் இந்த தங்க பத்திரங்களை வாங்குவதற்கான ஆப்ஷன் இருக்கும்.
ஆன்லைனில், வங்கி கேட்கும் விவரங்களைக் கொடுத்து, ஆன்லைனிலேயே பணத்தைச் செலுத்தி விண்ணப்பித்தால் போதும். தங்க பாண்டுகள் ஒதுக்கீடு ஆன பின் வங்கிகளில் இருந்து Physical Paper / E Certificate ie Gold Sovereign Bond கள் பெற்றுக் கொள்ளலாம். GSB (Sovereign gold Bond), தனி நபர்கள் 1 கிராம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 4,000 கிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கும் இந்த 4 கிலோ கிராம் தான் உச்ச வரம்பு. மற்ற அமைப்புகள் 20 கிலோகிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த உச்ச வரம்பை அரசு அவ்வப்போது மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. GSB மூலம் வேறு என்ன லாபங்கள் ??
முன்பே சொன்னது போல
1. இந்த தங்க பத்திரங்களை (Sovereign gold Bond), நகைக் கடையில் வாங்கும் தங்கத்துக்கு இணையாக எல்லா வகையிலும் பயன்படுத்தலாம்.
2. தங்க பத்திரங்களாக வாங்கப்படும் தங்கத்துக்கு தேய்மானம் கிடையாது.
3. ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.5 % வட்டி வேறு கொடுப்பார்கள்.
4. தங்கத்துக்கான வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை நம் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள்.
5. எட்டு வருட முடிவில் மொத்த அசல் + கடைசி வட்டி என சேர்த்து போட்டு விடுவார்கள்.
6. இவை எல்லாம் போக 8 வருடத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்தை நம் பாண்டுகள் கண்டு இருக்கும். எனவே 8 வருட தங்க விலை ஏற்றத்தை நாம் லாபமாகப் பார்க்கலாம். நடுவில் விற்கலாமா? தங்க பத்திரம் (Sovereign gold Bond) வாங்கி, 5 ஆண்டுகள் கழித்து, தங்க பத்திரங்களை விற்கலாம். அப்படி விற்க வேண்டும் என்றால், வட்டி போடும் தேதிக்கு ஒரு மாதம் முன்பே நாம் தங்க பத்திரங்கள் வாங்கியவர்களிடம் சென்று முறையாக தெரியப்படுத்த வேண்டும். நம் மொபைல் எண், மின்னஞ்சல், வங்கிக் கணக்கு போன்றவைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறது என்றால் கூட அதை இந்த ஒரு மாதம் முன்பே குறிப்பிட்டுச் சொல்லி மாற்றிக் கொள்வது நல்லது.
வரிச் சலுகைகள்::
இந்த தங்க பத்திரங்களில் (Sovereign gold Bond) முதலீடு செய்து 8 ஆண்டுகள் கழித்து விற்றால் மூல தன ஆதாய வரி, Capital Gain Tax கிடையாது. இந்த வரிச் சலுகை வேறு எந்த கோல்ட் இடிஎஃப், கோல்ட் ஃபண்ட்ஸ் அல்லது தங்க நகைகளுக்கும் இந்த வசதி கிடையாது எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் தங்க பத்திரங்களுக்கு கொடுக்கப்படும் 2.5 சதவிகித வட்டிக்கு TDS (Tax Deduction at Source) பிடித்தம் செய்யமாட்டார்கள். பிறகு என்ன ஆகையால் Lockdown ஆனால் என்ன வீட்டில் இருந்தபடியே, அக்சய திரிதிக்கு, தங்க பாண்டுகளில் (Sovereign gold Bond) முதலீடுச் செய்ய வேண்டியது தானே!
R. கயிலைராஜன் B.E