‘‘ஹிந்து எழுச்சி, வாக்குகளாக மாறட்டும்!”

காவிரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம் பணிகள் முடிந்த கையோடு  இன்னும் ஓரிருமாதங்களில் ஹிந்துக்கள் பலரும் லக்ஷக்கணக்கான அளவுக்கு ஒன்று திரள போகும் வைகைப் புஷ்கரம் சம்பந்தமாக தென் மாவட்டங்களில்  பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்। அகிலபாரத துறவிகள் சங்க செயலர் ஸ்ரீராமானந்தர்.

“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹிந்துக்கள் வாக்குக்கள் ஹிந்துக்களுக்குத்தான் என்கின்ற பேரலை  அசாத்திய சீற்றத்துடன் உருவாகியுள்ளதோ என்று சொல்லும் அளவுக்கு ஹிந்துக்கள் இன்று ஒன்று திரண்டு நிற்கின்றனர்” என்று விஜயபாரதத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறினார்.

‘‘மக்கள் நலன் என்கின்ற நல்லெண்ணத்தை விடுத்து, சட்ட விரோதமாக வெளி நாடுகளிலிருந்து பற்பல என்ஜிஓக்கள் மூலம் பணத்தை பாய வைத்து தேச விரோத சக்திகளை ஊக்குவித்து  நக்சலைட் இஸ்லாமிய தீவிரவாதம், சர்ச்சுக்கள் மூலமாக மத மாற்றம் செய்யும் சக்திகள் களைந்தெறியப்பட வேண்டும்.

‘‘தொடர்ந்து பல ஆண்டுகளாக பாரத எல்லைகளில் வாலாட்டி வரும் சக்திகளை ஒட்ட நறுக்கி வைக்கும் அளவுக்கு, நமது பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மோடி. மோடியின் தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு முதல் முறையாக சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. சமீபத்திய  ராணுவ நடவடிக்கை மூலம் உலக அரங்கில் பாரதத்திற்கு தலை நிமிர்வை உண்டாக்கினார் பிரதமர்.

‘‘மோடி தலைமையின் கீழ் இளைய பாரதம் தேச உணர்வை மேலிட வீறு கொண்டு எழுந்துள்ளது. நாட்டு நலனில் மிகச் சிறந்த முடிவுகளை உடனுக்குடன் எடுக்கவல்ல நிர்வாக திறமை மோடியிடம் மட்டுமே. அவருக்கிணையான தலைமை  எதிரணியில் ஒருவர் கூட இல்லை என்ற உண்மையை இளைஞர்கள்  உணரத்தொடங்கிவிட்டனர்.

‘‘இம்மாதம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஹிந்து சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, மோடி அவர்களின் கரத்தை பலப்படுத்தி, தேச உணர்வு, ஸ்திரத்தன்மை  ஆகியவற்றுக்கு ஊட்டமளிக்க நம்மாலானதை  செய்ய வேண்டியது இன்றியமையாதது.”