ஹிந்து என்றால் கிள்ளுகீரையா?

ஹிந்து மதத்தை தொடர்ந்து இழித்தும் பழித்தும் பேசி வருபவர்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும். சமீபத்தில் மனுநீதி குறித்து பேசிய திருமாவளவன் தற்போது திருஞான சம்பந்தர்  பெருமானை கொலைகாரர் என பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கே.எஸ் அழகிரி பா.ஜ.கவின் வேல் யாத்திரையை குறித்து பேசும் சாக்கில், முருகப்பெருமானின் வேலை இழிவுபடுத்தி பேசியுள்ளார். கிறிஸ்தவ மதபோதகரான மோகன் சி லாசரஸ், ”திருத்தணி ஒரு முக்கியமான சாத்தானின் அரண் இருக்குமிடம், அங்கு கிறிஸ்துவை பரப்ப ஒரு குழுவை நான்கு பேருந்துகளில் அனுப்பியுள்ளோம்” என ஹிந்து கடவுளான முருகனை குறித்து இழிவாக பேசியுள்ளார். ஹிந்துக்களின் மீதான இதைப் போன்ற தொடர் தாக்குதல்கள் குறித்து தமிழகத்தில் வாழும் ஹிந்துக்களும், தி.மு.க கூட்டணியில் உள்ள ஹிந்துக்களும் சிந்திக்க வேண்டும்