ஹிந்துக்களை மதம் மாற்ற 2.25 லட்சம் பேர்

”இந்தியாவில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்,” என விஸ்வ இந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

கோயில்களுக்கு செல்வோர் ஜாதி வேறுபாடுகளை மறந்து பக்தன் என்ற அடிப்படையில் தரிசனம் செய்ய வேண்டும். ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் போன்ற ஆன்றோர் ஜாதி வேறபாடுகளை களைய முயற்சி எடுத்து வந்தனர். அவ்வழியை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம். கோயில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜைகள் செய்ய வேண்டும் என காந்தியடிகள் முயற்சி எடுத்தார். இந்தியாவில் மதமாற்றம் எனும் மோசடி நடந்து வருவது வேதனை அளிக்கிறது. ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இப்பணிக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. பிற மதத்திற்கு சென்ற ஒரு லட்சம் பேரை ஹிந்து மதத்தில் வி.எச்.பி., மீண்டும் இணைத்துள்ளது. இப்பணியை பூஜாரிகளும், துறவியர்களும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்கு உரியது, என்றார்.

2 thoughts on “ஹிந்துக்களை மதம் மாற்ற 2.25 லட்சம் பேர்

  1. May I suggest that we can recite Tirujnana Sambandar’s Tevaram every day. In each of his about 390 padhigams, ninth song will pertain to the ill effects of other religions which were inimical to Sanatana Dharma at that time. We can recite one song every day and this can be easily covered in almost 13 months. This is a humble suggestion.
    Apart from this attempt at the spiritual level, each of us in our own locality, target those who are ear marked for conversion by encouraging them in vilakku puja, teaching the children of such families songs in both Tamil and Sanskrit. We can teach them the bare essentials of Hinduism through stories of Nayanmars, Alwars, Ramayanam and Maha Bharatam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *