ஸ்லீப்பர் செல் உருவாக்கிய பயங்கரவாதி

மேற்கு வங்கம், அசாம் மற்றும் பல வடகிழக்கு பகுதிகள் நீண்ட காலமாக சட்டவிரோத வங்கதேச குற்றவாளிகள் தங்க பாதுகாப்பு புகலிடமாக இடமாக உள்ளது. வங்கதேச முஸ்லிம் ஜிஹாதிகள், பாரதத்தின் வடகிழக்கு பகுதிகளை ஜிஹாத்தை பரப்புவதற்கான இனப்பெருக்க மையமாக மாற்றுகின்றனர். இந்த ஜிஹாதி நடவடிக்கைகளின் பல நடவடிக்கைகளை காவல்துறையினர் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், 2015ம் ஆண்டு சில்ஹெட் வலைதளப்பதிவாளர் ஆனந்த விஜய் தாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக வங்கதேசத்தில் தேடப்படும் பயங்கரவாதி பைசல் அகமதுவை கொல்கத்தா காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து சமீபத்தில் கைது செய்தனர். வங்கதேசத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனந்த விஜய் கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் இருந்து தலைமறைவான பயங்கரவாதி பைசல் அகமது, அசாமில் உள்ள சில்சாரில் சட்டவிரோதமாக நுழைந்தார். உள்ளூர் முஸ்லிம்கள் துணையுடன் மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 7 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார். அங்கு வசித்தபோது வங்கதேச பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களாவுக்கு ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளை தயார் செய்தார். மேலும், பைசல் அகமது தனது வீட்டு முகவரியை மிசோரமில் உள்ள லெங்புய் என்று காட்டி போலி முகவரி ஆவணங்கள் மூலம் சில அதிகாரிகள் துணையுடன் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். இதனையடுத்து பெங்களூருவுக்குச் சென்று அங்கேயே தங்கினார். வங்கதேச காவல்துறையின் தகவலின் பேரில் அவரை கைது செய்த கொல்கத்தா சிறப்பு காவல் படையினர், பெங்களூருவில் இருந்து பைசலை மேலதிக விசாரணைக்காக கொல்கத்தா அழைத்துச்சென்றனர். இதனிடையே, அசாம் காவல்துறையினர், சமீபத்தில் பார்பேட்டா மாவட்டத்தில் இந்த பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய தொகுதியை முறியடித்துள்ளனர்.. முகதாஸ் அலி அகமது மற்றும் சஃபிகுல் இஸ்லாம் உட்பட சுமார் 16 ஜிஹாதிகளை கைது செய்துள்ளனர்.