‘சதர் அஞ்சுமான் அஹமதியா காடியான்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு பஞ்சாப்பை தலைமை யிடமாக கொண்டு செயல்படுகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து, ரூ. 198.26 கோடியும், 14 ஆண்டுகளில் ரூ. 628.18 கோடியும் வசூலித்துள்ளது. அஹமதியா முஸ்லிம்களுக்குக்கான பிரசுரங்கள், மசூதி, வீடுகள் கட்டுதல் போன்ற காரணங்களை சொல்லி இந்த பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் அஹமதியா சமூகத்தினர் 6000 பேரும், பாரதத்தில் சுமார் 1.5 லட்சம் பேரும் உள்ளனர். எனவே இந்த பணம் மதமாற்றம், பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப் படுவதாக தெரிகிறது. இது குறித்து சட்ட உரிமைகள் ஆய்வகம் எனும் அமைப்பு உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது