கேரள அரசின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரெஸ்மிதா ராமச்சந்திரன், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை குறித்த தனது சமூக ஊடகப் பதிவில், ‘ஜெனரல் பிபின் ராவத்தின் பதவி உயர்வு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது, அவரது மரணம் அவரை புனிதராக மாற்ற முடியாது’ என்று கீழ்தரமாக கருத்து வெளியிட்டார். இது குறித்து அட்வகேட் ஜெனரல் கோபாலகிருஷ்ண குருப்புக்கு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் கே. சுந்தரன், டி. ரங்கநாதன், விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த சார்ஜென்ட் எஸ். சஞ்சயன், முன்னாள் கடற்படை வீரர் சி.ஜி சோமசேகரன் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், ரெஸ்மிதாவின் இந்த செயல் உங்கள் மதிப்பிற்குரிய அலுவலகம் உட்பட மாநில அரசின் ஒட்டுமொத்த சட்டக் குழுவையும் மிகவும் மோசமாக பிரதிபலிக்கிறது. நமது ராணுவ வீரர்களை களங்கப்படுத்தியுள்ளார். பேச்சு, கருத்துச் சுதந்திரம் அவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.