வீரர்களுக்கு பதக்கங்கள்

தேசிய விளையாட்டு விருதுகள் 2020ன் அனைத்து வெற்றியாளர்களும் ஏற்கனவே ரொக்க விருதுகளைப் பெற்றிருந்தனர், ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக கடந்த ஆண்டு விளையாட்டு விருதுகள் விழா நடைபெற்றபோது அவர்களால் கோப்பைகள், சான்றிதழ்களை  நேரில் பெற முடியவில்லை.

இதற்காக டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களுக்கு விருதுகள் வழங்கினர். கேல் ரத்னா விருது பெற்ற மாரியப்பன் தங்கவேலு, ராணி ராம்பால், வினேஷ் போகட் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். 5 கேல் ரத்னா மற்றும் 27 அர்ஜுனா விருதுகள் உட்பட மொத்தம் 74 தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களை வாழ்த்தி பேசிய பேசிய அமைச்சர், ‘விருது பெற்றவர்களின் பயணம் இத்துடன் முடிவடையாது, சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது, திறமையான விளையாட்டு வீரர்களைத் தேடி, அவர்களை வளர்த்தெடுத்து, சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் திறன் கொண்டவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்’ என தெரிவித்தார்.