பாரதம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு நவம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில், ”மத்திய அரசின் திட்டத்தின்படி தமிழகத்திலும் 80 ஆயிரம் கிராமங்களுக்கும் நேரடியாக வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி வழங்கும் திட்டம் துவக்கப்படும்’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் தற்போது 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 32 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. விரைவில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை, 100 சதவீதம் எட்டப்படும் என தெரிவித்தார்.