தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் அகிலபாரத செயற்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:
‘காசி மதுரா மீட்டெடுக்க உறுதி: காசி விஸ்வநாதர் கோயிலின் உண்மையான இடங்களையும் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தையும் மீட்டெடுக்க ஹிந்துக்கள் உறுதியாக உள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அதற்கான சட்ட வழிமுறைகளை அரசியலமைப்பின் கட்டமைப்புகளின் அடிப்படையில், அமைதியான முறையில் தீர்வை கான வேண்டும் என்று விரும்புகிறது. எனினும், தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கிறது. மேலும் இரு தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பது பொருத்தமானது என வி.ஹெச்.பி கருதுகிறது.
மதவெறி வன்முறைகளை கட்டுப்படுத்த கவண்டும்: சமீபத்தில் பாரதம் முழுவதும் மதவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை கலவரங்கள் மூலம் பொது சொத்துக்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையாளர்களின் தலைவர்கள், எதிர் தரப்பினரின் தலையை வெட்டுங்கள்,கண்களை பிடுங்குங்கள் என்று பகிரங்க மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் நாட்டின் இறையாண்மையை குலைக்கும் விதமாக செயல்படுகின்றனர். வெளிநாட்டு சதித்திட்டங்கள் அடிப்படையில் செயல்படுகின்றன இந்த கலவர குழுக்கள். இதனை வி.ஹெச்.பி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசுகள் இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும். ஹிந்து சமுதாயம் தங்கள் உறிமைக்காக எழுந்து நிற்கவும், தேவைப்படும் இடங்களில் தற்காப்பு உரிமைகளை பயன்படுத்தவும் வி.ஹெச்.பி அழைப்பு விடுக்கிறது. பாரதம் அதன் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடக்கிறது; ஷரியா சட்டத்தின்படி அல்ல.
கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: ஹிந்துக் கோயில்களை சில மாநில அரசுகள் தொடர்ந்து நிர்வகித்து வருகின்றன. இது வருத்தமளிக்கும் செயல், ஆங்கிலேய ஆட்சியின் தொடர்ச்சி, காலனித்துவ அடையாளம் என வி.ஹெச்.பி கருதுகிறது. மாநில அரசுகள் பிடியிலிருந்து கோயில்களை விடுவித்து அதன் நிர்வாகத்தை ஹிந்து சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதற்கான போராட்டத்தை வி.ஹெச்.பி தொடர்ந்து நடத்தும். ஹிந்து கோயில்களுக்கு வரும் பணம் அதன் பூஜை, பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அரசின் நிர்வாக செலவுகளுக்காக அல்ல.
ஹிந்து பண்பாடு பாதுகாப்பும் சேவை பணிகளும்: விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதத்தில் ஹிந்து குடும்ப வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரங்கள் பாதுகாக்கும் விதமாகவும், அடுத்த தலைமுறை ஹிந்துக்கள் எந்த தயக்கமுமின்றி ஹிந்து தர்மத்தை பின்பற்றுவதற்கும் அதன் செயல் திட்டங்களை தீவிரப்படுத்தும். ஹிந்து சமுதாயத்தை ஒன்றிணைப்பதற்காக சேவை காரியங்களை அதிகப்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.