விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்ல, நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே குறிக்கோள் – பிரதமர்

துமகூரில் நடைபெற்ற  விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையை வெளியிட்டார். தும்கூரு  விவசாயிகளுக்கு கிருஷி கர்மன் விருதுகளையும் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசியதாவது;-   “இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவதில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக இணையதளம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்களுக்கான பதப்படுத்தும் நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவுகளை குறைக்க கால்நடைகளுக்கான நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.