விளையாட்டுகள் மூலம் தேசிய பண்பை வளர்க்க பாடுபடும் கிரீடா பாரதி

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை விளையாட்டுகளில் மக்களின் ஆர்வத்தை அதிகரித்து, அதன் மூலம் தேசியப் பண்பை வளர்க்க பாடுபடும் கிரீடா பாரதி பற்றி அறிவோம்…

 

ஆரோக்கியமான பாரதம், விளையாட்டு மூலம் வலுவான பாரதம் என்ற நோக்கத்துடன், 1992 ஆம் ஆண்டு கிரீடா பாரதி நிறுவப்பட்டது. அனைத்து வயது மற்றும் தொழில்களைச் சேர்ந்த மக்களும், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடி மகிழ்ச்சியை அனுபவிக்கவும், விளையாட்டுத் திறனை வளர்க்கவும், ஆரோக்கியமான சமூக விழுமியங்களை வளர்க்கவும் வேண்டும் என்னும் நோக்கில் தொடங்கப்பட்டது. தேசிய மற்றும் பாரம்பரிய பாரதிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதோடு, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் விளையாட்டுகளில் பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும், விளையாட்டு மூலம் தேசியப் பண்பை வளர்க்கவும் பாடுபடுகிறது, கிரீடா பாரதி.
நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கிரீடா பாரதி செயல்பட்டு வருகிறது. இது பாரதத்தில் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்து, சர்வதேச விளையாட்டுகளில் நமது நாடு ஒரு முன்னணி இடத்தைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிக்கோள் – : அனைவருக்கும் ஆரோக்கியம்
விளையாட்டு மூலம் நல்ல குணநலன்களை உருவாக்குதல், குணநலன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புதல், ஆரோக்கியமான பாரதம் -வலிமையான பாரதம், பாரத பாரம்பரிய விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் வளர்த்தல்.
இலக்கு -: விளையாட்டுகளில் அனைவரின் பங்கேற்பு
பாரத பாரம்பரிய விளையாட்டுகளில் படைப்பாற்றல், பணி நிறுவுதல், விளையாட்டு மையங்கள், உடற்பயிற்சி மையங்கள், யோகா மற்றும் தற்காப்பு மையங்கள்,
K விளையாட்டு கட்டமைப்பில் பாரதிய
நெறிமுறைகளை இணைத்தல்,
K ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு
விளையாட்டு மைதானம் மற்றும்
K விளையாட்டு மையங்கள் தீவிரமாக
செயல்படுவதை ஊக்குவித்தல்
வருடாந்திர நிகழ்ச்சிகள் :
கிரீடா பாரதி நிறுவன தினம்
(அனுமன் ஜெயந்தி)
சைத்ர பூர்ணிமா, அனுமன் ஜெயந்தி அன்று கிரீடா பாரதி நிறுவப்பட்டது. வலிமை மற்றும் பக்தியின் சின்னமான ஸ்ரீ ஹனுமானைக் கௌரவிக்கும் வகையில் உறுப்பினர்களும், வீரர்களும் அந்தந்தப் பகுதிகளில் இந்த நாளைக் கொண்டாட ஒன்றுகூடுகிறார்கள்.
தேசிய விளையாட்டு தினம் – : ஆகஸ்ட் 29 (தியான் சந்த் பிறந்தநாள்)
நமது நாட்டின் மிகச்சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று, நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். விளையாட்டு வாரம் போன்ற செயல்பாடுகள் மூலம் மூலம், தியான் சந்த்தின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தேசபக்தி மற்றும் குணநலன்கள் மற்றும் பிற தேசிய விளையாட்டு வீரர்களின் மீதான விழிப்புணர்வை கிரீடா பாரதி ஏற்படுத்துகிறது.
சூரியநமஸ்காரம்
(சூர்ய சப்தமி / ரத சப்தமி)
உடல்நலனை மேம்படுத்துவதற்காக, பண்டைய முனிவர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய உடற்பயிற்சி முறையான சூரிய நமஸ்காரத்தை, தினமும் பயிற்சி செய்ய கிரீடா பாரதி ஊக்குவிக்கிறது. ரத சப்தமியன்று, நாடு முழுவதும் வெகுஜன மக்களுக்காக, சூரிய நமஸ்காரம் பயிற்சி வழங்கப்படுகிறது. கிராமம் மற்றும் மாவட்டங்களில் பயிற்றுனர்களை தயார்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச யோகா தினம் – ஜூன் 21
சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட, அனைத்து குடிமக்களும் பொது இடங்களில் ஒன்றுகூடி, கூட்டாக யோகா செய்யுமாறு கிரீடா பாரதி அழைப்பு விடும்.
கிரீடா ஞான பரிக்ஷா (விளையாட்டு அறிவு தேர்வு)
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்காக, வருடாந்திர ஆன்லைன் தேர்வு நடைபெறும். மாணவர்களின் பெற்றோர்கள் விளையாட்டு பற்றி கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுவர். பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் படுகின்றன.
ஜீஜா மாதா சன்மான் விழா
ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் அவர்களின் பெற்றோரின், குறிப்பாக தாயின் அர்ப்பணிப்பு உள்ளது. இந்தப் பங்களிப்பைப் போற்றும் வகையில், வெற்றி பெற்ற தேசிய மற்றும் சர்வதேச வீரர்களின் தாய்மார்களுக்கு “ஜீஜாமாதா சன்மான் விருது” வழங்கப்படுகிறது. மாதா ஜீஜாபாயின் உத்வேகத்தை இது பிரதிபலிக்கிறது. அவரது வளர்ப்பு சத்ரபதி சிவாஜி மகாராஜின் வலிமை, தைரியம் மற்றும் தலைமைத்துவத்தை இந்த விருது வெளிப்படுத்தும்.
தமிழகத்தில் கிரீடா பாரதி
வட தமிழகத்தில், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ல், சென்னையில் புதுச்சேரியை சேர்ந்த ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜே. அரவிந்தன் ஜி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதேபோன்று தென் தமிழகத்தில், திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஷ்ரமம் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர். திருமாறன் ஜி அவர்கள் தலைமையில் மதுரையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28ல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 800க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மிகவும் சிறப்பாக விளையாட்டின் துறை மூலமாக, தேசப் பணியை செய்து வருகின்றனர்.
கிரீடா பாரதி என்பது மக்களிடையே விளையாட்டு, உடல் தகுதி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ விளையாட்டு அமைப்பாகும். அதன் கிரீடா கேந்திரங்கள் மூலம், பல்வேறு வயதினரைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு முறையான விளையாட்டுப் பயிற்சி, பயிற்சி நுட்பங்கள் மற்றும் பயிற்சி திறன்கள் வழங்கப்படுகின்றன.
கிரீடா பாரதியுடன் தொடர்புடைய அனைத்து பயிற்சியாளர்கள் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகள் மூலம், விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும், வலுவான அர்ப்பணிப்புடன் தங்கள் சேவைகளை தன்னார்வத்துடன் வழங்குகிறார்கள். கிரீடா கேந்திரங்களில் பயிற்சி பெறும் நபர்களுக்கு, எந்த சந்தா அல்லது பயிற்சி கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரீடா கேந்திரங்களை நடத்துவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் முழுவதும் விளையாட்டு ஆர்வலர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பொதுமக்களின் நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் ஈடுசெய்யப்படுகின்றன. பயிற்சி மையங்களின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, காரியகர்த்தாக்கள் இந்த வளங்களை தீவிரமாக மேற்பார்வையிட்டு நிர்வகிக்கின்றனர்.
கிரீடா பாரதி என்பது விளையாட்டு மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றும் ஒரு பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா அமைப்பாகும் (NGO). மேலும், இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80G ன் கீழ், வரி விலக்கு சலுகைகளைப் பெறுகிறது. ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியில், உங்கள் ஊக்கத்தையும், ஆதரவையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம். எங்களுடன் இணைந்துப் பணியாற்ற – 9894172374, 9566636237, 9442169304, 9840762975 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்:
kreedabharatinorthtamilnadu@gmail.com
கட்டுரையாளர்: விளையாட்டு மையங்களின் அகில பாரத பொறுப்பாளர்
(அகில பாரத கிரீடா கேந்திர பிரமுக்)