வில்லங்கம் செய்யும் கேரள அரசு

புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ நாராயண குரு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் சின்னம் கேரளாவில் பெரும் சர்ச்சையைத் ஏற்படுத்தியுள்ளது. சின்னத்தில் குருவின் சித்தரிப்பு இல்லை. எந்த அர்த்தமும் இல்லாமல் இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ நாராயண குருவின் உருவத்தை சின்னத்தில் சேர்க்கக்கூடாது என சதி நடந்ததாகவும், அவரது உபதேச வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.