கார்கில் போர் வீரர், கேப்டன் விக்ரம் பத்ராவின் மார்பளவு சிலை ஜம்மு காஷ்மீரில் உள்ள பாலம்பூர் ராணுவ நிலையத்தில் அவரது பெற்றோரால் திறந்து வைக்கப்பட்டது. நினைவேந்தலின் போது, ராணுவத் தளபதி கேப்டன் விக்ரம் பத்ராவின் அலாதியான துணிச்சலை நினைவு கூர்ந்தார். ‘தனது சக வீரர்களை வீரத்துடன் போராடத் தூண்டி முக்கிய இடமான பாயிண்ட் 5140’ஐ வெற்றிகரமாகக் கைப்பற்ற வழிவகுத்தார். இது பாயின்ட் 470ல் நாம் பெற்ற தொடர் வெற்றிகளுக்கு வழி வகுத்தது. அவர் ஒரு குறுகிய முகடு வழியாக எதிரிகளின் நிலையை தாக்கி, பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் ஐந்து எதிரி வீரர்களைக் கொன்றார். தனது தனிப்பட்ட பாதுகாப்பைவிட தேசத்தின் பாதுகாப்பே முக்கியம் என கருதி இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளுக்கு இணங்க, மிக உயர்ந்த உயிர் தியாகத்தை செய்தார். அதற்காக அவருக்கு மிக உயர்ந்த வீர விருது “பரம் வீர் சக்ரா” வழங்கப்பட்டது’ என கூறினார்.