வார ராசிபலன் – விகாரி வருடம், மார்கழி 27 முதல் தை 04 வரை( ஜனவரி 12 – 18) 2020

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் பணியாற்றுவீர்கள். அரசுத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக வருமானமும் வளர்ச்சியும் கிடைக்கும். சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள்.உங்களுக்கு நிறைய நண்பர்கள் ஏற்படுவார்கள். அவர்களால் நன்மை ஏற்படும்.

பெண்மணிகள்: குடும்பத்தில் நிலவிவந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். விருப்பங்கள் நிறைவேறும். சுபகாரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் நடைபெறும். புதிய அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவ மணிகள்: சக நண்பர்களின் செயல்களால் உங்களின் நற்பெயர் கெடும். நிதானமான போக்கைத் தவிர்த்து படிப்பில் ஆர்வம் காட்டவும்.

சிறுதொழில், வியாபாரம்: அரசுத்துறை ஆதரவு, வாடிக்கையாளர் ஆதரவு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: புதிய பதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: மதிப்பும், மரியாதையும் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சக ஊழியர்களிடம் இணக்கமாகப் பழகவும். தகுதியை உயர்த்திக் கொள்ள கடினமாக உழைப்பீர்கள். போட்டியைத் தவிர்த்து வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். எரிச்சல், கோபத்தை குறைத்துக்கொண்டு இணக்கமாகச் இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை.

மாணவ மணிகள்: தாய்வழி உறவுகள் வழியே உதவிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளரும். வருமானம் தடையின்றி கிடைக்கும். விலகி சென்றாலும் வம்பிழுப்பார்கள்.தொழில் வியாபாரத்தில் சரிவு ஏற்படும்.

அரசியல்வாதிகள்: கெளரவம் பாதிக்காமல் பணியாற்றவும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவகத்திலும், நண்பர்களிடமும் வாக்குவாதம் தவிர்க்கவும். பணிகளில் சோர்வு எற்படும். அன்றாடப் பணிகளை ஒத்திப்போட வேண்டாம். வருமானம் குறையும். உடனடியாக சேமிக்க திட்டமிடுங்கள்.

பெண்மணிகள்: பொன்,  பொருள்களை பத்திரமாக காப்பாற்றவும். குடும்பத்தினருடன் பகை தவிர்க்கவும். உடல் நலனில் அதிக கவனம் செலுத்தவும். மனத்தடுமாற்றம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

மாணவ மணிகள்: அனாவசியமான பேச்சு தவிர்க்கவும். கல்வியில் ஈடுபாடு தேவை.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்கள் விலகுவார்கள். வருமானம் பெருக திட்டமிட வேண்டும். அரசாங்க விரோதம் ஏற்படலாம். தங்களது செயலாற்றலால் அரசு ஆதரவை பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: தலைமையை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

கடகம்:

 

உத்தியோகஸ்தர்கள்: விருப்பமான இடமாற்றம், பதவி, அந்தஸ்து உயர்வு ஏற்படும். சிலருக்கு வேலை மாற்றம் அமையும். வாதாடும் திறமையால் புத்திசாலித்தனம் வெளிப்படும். கெளரவம், பதவி உயர்வினால் பெருமிதம் ஏற்படும்.

பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் சேரும். சகோதர வழியில் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் நிலவும். உடலில் பொலிவும் அழகும் அதிகரிக்கும்.

மாணவ மணிகள்: தெளிவான புத்தியினால் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். செயல், சாமர்த்தியம் மேலோங்கும். அன்புள்ள நண்பர்கள் அமைவார்கள். புத்தொளி பெறுவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். வசதிகள் அதிகரிக்கும். வாகனம் வாங்கி பெருமிதம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள்: புகழ் கிடைக்கும், பொருளும் கிடைக்கும்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெறும். புதிய நண்பர்களால் அதிக நன்மை உண்டாகும். மரியாதை, புகழ், அந்தஸ்து ஓங்கும். சிலருக்கு தலைமைப் பதவி கிடைக்கும். தைரியத்துடன் இனி செயல்படுவீர்கள்.

பெண்மணிகள்: பொன்பொருள் கைகூடும். ஆடை கிடைக்கும். திருமணப் பேச்சு நடக்கும். சுப காரியங்கள் நடைபெறும். நட்புணர்வு அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் பொன், பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மாணவ மணிகள்: கல்வியில் ஆர்வம் உடைய நண்பர்களால் உயர்கல்விக்கு உதவி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தனவரவும், பங்குதார்களின் ஆதரவும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அந்தஸ்து, பதவி கிடைக்கும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: விரோதம் ஏற்படும் என்பதால், கோபத்தை கைவிடவும்.குழப்பம் தவிர்க்கவும். பணியில் உள்ளபோது பொறுமையை கையாள வேண்டும். உழைப்பு அதிகரிக்கும். விரைந்து முடிக்க வேண்டிய பணிகளை ஒத்தி வைக்கக்கூடாது. சோர்வை தவிர்த்து கவனத்தை பணியில் வைக்கவும்.

பெண்மணிகள்: இல்லறத்துணையுடன் இணக்கமாகப் பழகவும். தன விருத்தியும், குடும்ப நிம்மதியும் நிலவும். சந்ததி விருத்தி அடையும். வசதி, வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ மணிகள்: அறிவுத்திறனும், தொழில் திறனும் அதிகரிக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: கடினமான சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்: கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் இணக்கம் தேவை.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: சிறிய முயற்சிகளிலேயே சில விஷயங்களில் வெற்றி கிடைத்துவிடும். உழைப்பு அதிகரிக்கும். விருப்பங்களும் நிறைவேறும். அரசு ஊழியர்கள் விரும்பிய மாற்றம் பெறுவார்கள். நன்மதிப்பு பெறுவீர்கள்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் ஆதரவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான இல்லறம் நிலவும். நிதானமாக செயல்பட்டால் பலன் அதிகரிக்கும்.சொற்பொழிவுத் திறன் ஏற்படும். நல்ல குழந்தை பிறக்கும். தன விருத்தி அதிகரிக்கும்.

மாணவ மணிகள்: அநாவசியமான அலச்சலை தவிர்க்கவும். நண்பர்களுடன் சேர்க்கையை தவிர்க்கவும். படிப்பில் அக்கறை அவசியம்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய சிந்தனை, முயற்சி பலிக்கும்.

அரசியல்வாதிகள்: தலைமை ஆதரவு தரும். மதிப்பு கூடும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: போட்டி, பொறாமை விலகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் சாதித்துக் காட்டுவீர்கள். வளர்ச்சி அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள்.

பெண்மணிகள்: உங்களின் யோசனைகள் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். விருப்பம் நிறைவேறும். வாரிசுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பெருமிதத்துடன் வலம் வருவீர்கள்.

மாணவ மணிகள்: அதிக மதிப்பெண் பெற்று அகம் மகிழ்வீர்கள். உழைப்புக்கேற்ற மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: முயற்சி வெற்றி தரும். தைரியத்துடன் செயல்படவும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவை பெற்று பலன் அடைவீர்கள். பிறருக்கு வாதாடி புகழ் பெறுவீர்கள்.சகோதரருடன் இனக்கமாகப் பழகவும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் அதிக அக்கறை காட்டவேண்டும். குழப்பம் தவிர்த்து தெளிவாக பணியாற்ற முயற்சி தேவை. கடினமான பணிகளை செய்து முடிக்க சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

பெண்மணிகள்: வாரிசுகளின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடைவீர்கள். சேமிப்பை அதிகரிக்க சிக்கனம் தேவை. இல்லறத் துணையின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு திருமணப் பேச்சு துவங்கும். எதையும் சாதிக்கும் திறமை ஏற்படும். விதவிதமாக அலங்கரித்துக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக செய்து காண்பிப்பீர்கள்.

மாணவ மணிகள்: உழைப்புக்கு ஏற்ப மதிப்பெண் அதிகரிக்கும். உடல் நலனிலும் மனநலனிலும் அக்கறை தேவை.

சிறுதொழில், வியாபாரம்: புதிய ஒப்பந்தங்களால் பலன் உண்டு.

அரசியல்வாதிகள்: தலைமையை அதிகரிக்கவும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களது செயல்திறன் அதிகரிக்கும். சிக்கலான பணியை எளிதாக செய்து பாராட்டு பெறுவீர்கள். சலுகைகள் பெற்று சாதித்துக் காட்டும் திறன் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வாக்கு வன்மையால் வெற்றி பெறுவீர்கள்.

பெண்மணிகள்: செலவு அதிகரிக்கும். சேமிப்புப் பணத்தை எடுத்து சகோதர்களுக்காக செலவிடுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். வளர்ச்சிக்கான சிந்தனை உருவாகும்.

மாணவ மணிகள்: ஊக்கத்துடன் படித்து மதிப்பெண் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கல்வித் தேர்ச்சியும் அறிவுத்திறனும் ஏற்படும்.

சிறுதொழில், வியாபாரம்: சமூக அந்தஸ்து உயரும். தொழில் விருத்தி அடையும்.

அரசியல்வாதிகள்: அனைத்து தரப்பினராலும் மதிக்கப் பெறுவீர்கள்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செல்வாக்கு பெற்று, சாதித்துக் காட்டுவீர்கள். சாதித்துக் காட்டி வாய்ப்புகள் அமையும். முன்னேற்றத்திற்கான முதல் படியில் கால் பதிப்பீர்கள்.

பெண்மணிகள்: இளம் பெண்கள் திருமண ஏற்பாடு துவங்கும். திருமணம் ஆனவர்கள் குழந்தை பேறு பெறுவார்கள். இல்லறத்திலும் இனிமை நீடிக்கும். விருப்பம் நிறைவேறும்.

மாணவ மணிகள்: சாகசங்கள் தவிர்க்கவும். கல்வியில் முழு கவனமும் செலுத்தவும். விளையாட்டில் எச்சரிக்கை தேவை.

சிறுதொழில், வியாபாரம்: புதிய தொழிலை துவக்கலாம். கடன் தொகைகள் வசூலாகும். கடன்கள் தீரும். தொழிலில் நிறைந்த லாபம் கிடைக்கும். போட்டிகள் விலகும். நண்பர்களால் வளம் பெறவீர்கள்.

அரசியல்வாதிகள்: தேவையான தொகை கிடைக்கும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். திறமையினால் நற்பெயர் கிடைக்கும். ஊதியம், பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். நண்பர்களுக்கு உதவுங்கள். புதிய பதவி, மரியாதை, அந்தஸ்து கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தின் பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தவும்.

மாணவ மணிகள்: தனித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறலாம். விருப்பமான துறையில் வேலையும் கிடைக்கும். நினைவாற்றல் வளர்க்க பயிற்சி தேவை.

சிறுதொழில், வியாபாரம்: பொருளாதார சிக்கல்களை கவனமாக கையாளவும். ஒப்பந்தங்கள் ஆலோசனை பெற்று நிறைவேற்றவும். அரசாங்கத்தால் லாபம் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் நீங்கும்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களை ஆதரித்து பலம் காட்டவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *