வார ராசிபலன் – விகாரி வருடம், மாசி 25 முதல் பங்குனி 01 வரை( மார்ச் 08 – 14 ) 2020

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: பலவித இன்னல்களை சந்தித்து பக்குவப்பட்ட உங்களுக்கு பதவி  உயர்வு கிடைக்கும். அந்தஸ்தும் கிடைக்கும். பொருளாதார உயர்வும் உண்டு. கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு சுபகாரியங்கள்  நடைபெறும். சேமிப்பை அதிகரிக்கவும். ஆபரணங்கள், அசையா சொத்துக்கள் வாங்கும்போது தரம், ஆவணங்களை ஆராயவும், குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

மாணவமணிகள்: உயர்கல்விக்கு செய்த முயற்சி பலன் தரும். பிறரின் தவறுகளை பெரிதாக்க வேண்டாம்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊழியர்களை உற்சாகப் படுத்துங்கள்.

அரசியல்வாதிகள்: விவாதங்களில் நிதானம் தேவை.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: செயல்திறன் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, வளர்ச்சிக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அனாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் ஏற்படும். பணியிடத்தில் பொறுப்புகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்மணிகள்: பொருளாதார சிக்கல்கள் நீங்கும். இல்லறத்துணையின் அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும். வங்கிக்கடன் தீரும். நகைகள் திரும்பப் பெறுவீர்கள். இளம் பெண்கள் காதல் வலையில் சிக்காதீர்கள்.

மாணவ மணிகள்: அதிருஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளவும். தேர்வுகளில் வெற்றி உண்டு.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். வங்கிக் கடன்களை நேர்செய்ய முயற்சி செய்யவும்.

அரசியல்வாதிகள்: சக கட்சியினரை ஆதரிக்கவும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: பணியில் சிக்கலான பணிகளையும் சிறப்பாக செய்து காட்டுவீர்கள். நிலுவைத் தொகை கிடைக்கும். நண்பர்களால் உதவி உண்டு. தளர்ச்சி விலகி, வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏற்படும்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயலாற்றுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு திருமணம் நடைபெறும். சகோதரர்களால் நன்மை உண்டு.

மாணவ மணிகள்: நுண் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சில நண்பர்களிடம் விலகி இருப்பது நல்லது. வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: வாய்ப்புகளை பயன்படுத்தி வளர்ச்சி காணலாம். புதிய முதலீடு தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள்: சக கட்சியினரால் பிரச்சினை வரலாம்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் பிறரின் விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டால் நன்மை தரும். சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்ககாட்ட வேண்டாம். சிலருக்கு அரசு உத்தியோகம் ஏற்படும். அலைச்சல் தவிர்க்கவும்.

பெண்மணிகள்: குடும்பத்தின் மேன்மைக்காக சில பணிகளை செய்வீர்கள். இல்லறத் துணையின் ஆலோசனை பெறவும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தனித்திருப்பதை தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: ஆசிரியரின் ஆலோசனை பெற்று தேர்வு எழுதவும். உதவித் தொகையுடன் உயல்கல்வி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ளலாம். சிலரின் நட்பால் வளர்ச்சி அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: புதிய நண்பர்களால் உற்சாகமாக வலம் வருவீர்கள். அதிக வருமானம் பெறுவதால் அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் பிறரின் தலையீட்டை ஏற்காமல் செயல்படவும். பாராட்டுபவர்களை எச்சரிக்கையுடன் அணுகவும்.

பெண்மணிகள்: சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறுவதால் உற்சாகத்துடன் இருப்பீர்கள். குடும்பப் பிரச்சினைகளில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். சிந்தித்து செயல்பட்டால் இல்லறத்துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மாணவ மணிகள்: நண்பர்களால் நன்மை உண்டு. உங்களுடைய வளர்ச்சிக்கான பாதையில் சுயமாக முடிவெடுக்கவும். அதிக மதிப்பெண் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களின் ஆலோசனை நன்மை தரும். தனலாபம் உண்டு. புதிய முயற்சி தற்போது தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள்: குற்றம் குறைகளை பேச வேண்டாம்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: பொறுப்புமிக்க பதவியை பெற வாய்ப்புள்ளதால் பொறுமையை கற்றுக்கொள்ளவும். உழைப்பு அதிகரிக்கும். புரியாத விஷயங்களை தெளிவுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதிலும் நிதானம் அவசியம்.

பெண்மணிகள்: குடும்ப நன்மைக்காக பொறுமையையும், நிதானத்தையும் கடை பிடிக்கவும். உற்சாகத்தை விடாதீர்கள். நோய்கள் வந்து நீங்கும். சொத்து தகராறுகள் தீரும். தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

மாணவமணிகள்: தீவிரமான பயிற்சி பெற்று மதிப்பெண் பெறுவீர்கள். துணிவுடன் செயல்படவும். பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பிரச்சினை இல்லாமல் தொழில் நடைபெறும். தொழிலை நேரிடையாக கவனிக்கவும்.

அரசியல்வாதிகள்: நேரிடையாக தலைவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் நலனில் அக்கறையுடன் இருப்பீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உங்களின் வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றத்தைத் தரும். அதிகம் பாராட்டுபவர்களை அருகே சேர்க்க வேண்டாம்.

பெண்மணிகள்: குடும்ப விஷயங்களில் அனைவரிடமும் பேசி நல்ல தீர்வை காணவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. ஆரோக்கியம் ஏற்படும்.

மாணவ மணிகள்: வளர்ச்சிக்கு உதவும் நண்பர்களுடன் பழகவும். கல்வியில் ஈடுபாடு காட்டவும். கலை, இலக்கியங்களில் ஆர்வம் ஏற்படும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களால் ஏமாற்றப்படலாம். பயணங்களில் அலைச்சல் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள்: செலவுகளை குறைக்கவும். நட்பு பேணவும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: பணியிடத்தில் உங்களின் பேச்சும், செயலும் போற்றப்படும். சிலர் இடம்மாறி செல்வதால் நிம்மதி ஏற்படும். கடன்கள் தீரும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். சிந்தித்து துணிவுடன் செயலாற்றுங்கள்.

பெண்மணிகள்: இளம் பெண்களின் திருமணம் நடைபெறும். குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை உருவாகும். உறவினர்களுடன் இணக்கமாகப் பழகவும். சேமிப்பு அவசியம்.

மாணவ மணிகள்: எதையும் ஆய்ந்தறிந்து செயல்படும் நீங்கள், உயர் கல்வியைப் பற்றி சிந்திப்பீர்கள். தளர்ச்சியை நீக்கினால் வளர்ச்சிக்கு தடை இருக்காது.

சிறுதொழில், வியாபாரம்: நேரிடையாக தொழிலை கண்காணிக்கவும். போட்டியாளர்களை சமாளிக்க வேண்டும். புதிய உத்திகள் நன்மை தரும்.

அரசியல்வாதிகள்: மகான்களின் தரிசனம் மகத்தான நல்ல மாற்றங்களைத் தரும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலம் இது. எதிலும் ஆய்ந்தறிந்து முடிவு எடுக்கவும். உயரதிகாரிகளின் ஆதரவை பெற முயற்சி தேவை. சிலருக்கு பதவி உணர்வு கிடைக்கும். அந்தஸ்து உயரடைவதால் சில பிரச்சினைகள் நீங்கும்.

பெண்மணிகள்: பொறுமையுடனும், ஊக்கத்துடனும் செயலாற்றுங்கள். இளம் பெண்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். சிலருக்கு தாய்மை பேறு பெறுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கவும்.

மாணவ மணிகள்: உயர் கல்விக்காக முயற்சி செய்யும்போது விசாரித்து முடிவெடுக்கவும். ஆசிரியர் உதவி பெற்று தேர்வு எழுதவும்.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்களை சமாளிக்க வேண்டும். உழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் இணக்கம் தேவை.

அரசியல்வாதிகள்: உங்களின் கடின உழைப்பை தலைமை கவனிக்கும். முன்னேற்றம் அடைய முயற்சி தேவை.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: பலரின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வுகள் பலவும் ஏற்படும். நட்பு பலப்படும். உங்களுடைய பணிகளை நீங்களே செய்திட வேண்டும். பொறுமையுடனும், நிதானத்துடன் செயல்பட்டு நற்பெயரை எடுக்க வேண்டும்.

பெண்மணிகள்: குடும்பத்தினருடன் குதூகலமாக இருப்பீர்கள். உறவினர்கள், தோழிகள் ஆதரவாக இருப்பார்கள். விவாதங்களைத் தவிர்த்து விநயமாக நடக்க வேண்டும். இனி உடல் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மாணவ மணிகள்: புத்தி சாதுர்யத்தால் பொருள் சேர்ப்பீர்கள். விருப்பமான துறையில் சிலருக்கு பணி  கிடைக்கலாம்.

சிறுதொழில், வியாபாரம்: பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படாது. சிந்தித்து செயல்படவும். அலைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களின் குறைகளை களையவும்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: விருப்பமான இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு ஆகியவை நடைபெறும். பொருளாதார ஏற்றங்கள் பெறுவீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். இல்லறத் துணையின் ஆரோக்கியம் மேன்படும். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்விக சொத்து மூலம் தனலாபம் உண்டு.

மாணவ மணிகள்: கவலையின்றி கல்வியில் நாட்டம் ஏற்பட வேண்டும். செலவுகளை குறைக்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: சிலரால் தொழிலில் தடை ஏற்பட்டாலும் சமாளித்து முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: பதவிகள் கிடைக்கும். வருமானமும் உண்டு.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: தங்களின் பணியில் இடையூறுகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்ற பிறகு பணிகளை தொடர்வது நல்லது. ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக நண்பர்கள் உதவுவார்கள்.

பெண்மணிகள்: இளம் பெண்களின் திருமணம் பேச்சு துவங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் நிரம்பி வழியும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மாணவ மணிகள்: தளர்ச்சி அடையாமல் இருக்கவும். சிறந்த பழக்க வழக்கம் உள்ளவர்களை நண்பராக்கிக் கொள்ளவும்.

சிறுதொழில், வியாபாரம்: ஊழியர்களை கண்காணிக்கவும். நம்பிக்கையான உறவினர்களை உடன் வைத்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவை கேட்டுப் பெறவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *