வளர்ச்சிப்பாதையில் பா.ஜ.க

உத்திரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஐந்தாண்டுகள் நல்லாட்சியைத் தந்துள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திமோடியும் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்தும் இரட்டை இஞ்சின் போல இயங்கி மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்தினார்கள். ஆட்சிக்கு ஆதரவான அலை வீசியுள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் துல்லியமாக உணர்த்தியுள்ளன. ஏறத்தாழ மூன்று தசாப்தத்திற்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஏற்கனவே இருந்த ஆட்சி மீண்டும் அரியணை ஏறுகிறது. இது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட சமாஜ்வாடி கட்சி இப்போது கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் கிழக்கு பிராந்தியத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் சமாஜ்வாடி 44 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மற்ற 6 பிராந்தியங்களிலும் பா.ஜ.க வே அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. உ

சமூகப் பொறியியல் என்று கூறி கடந்தகாலத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி மாயாஜாலம் நிகழ்த்தினார். இப்போது பகுஜன் சமாஜ் காணாமல் போய்விட்டது. இத்தேர்தலில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் பல்வேறு ஜாதிக்கட்சிகளை ஓரணியில் திரட்டினார். இது போதாது என்று முஸ்லிம்களின் வாக்குகளையும் குறிவைத்தார். யாதவர்களும் வேறு சில ஜாதியினரும் முஸ்லிம்களும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு சமாஜ்வாடி அணிக்கு வாக்களித்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் சமாஜ்வாடி அணிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களிலும் பெண்கள் சமாஜ்வாடியை புறக்கணித்துள்ளனர். முத்தலாக்குக்கு தடை போன்றவற்றை பா.ஜ.க அமலாக்கியுள்ளதால் தாமரையின் பக்கம் அவர்கள் சாய்ந்துள்ளனர். கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் ஜாதிப்பிடிப்பு முற்றிலுமாக தளர்ந்துவிட்டது என்று சொல்லமுடியாவிட்டாலும் மாநகரங்களிலும் நகரங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஜாதிசார்ந்த இறுக்கம் பெருமளவு தகர்ந்துவிட்டது.

குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே நாட்டுப் பற்று கலாச்சாரப் பெரிமிதம், கல்வி மேம்பாடு தொழி அபிவிருத்தி சமூக நல்லிணக்கம் போன்ற நற்பண்புகள் மேலோங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் பிரதிபலிக்கின்ற மகத்தான தேசிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால்தான் ஜாதி எல்லைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு இளைய சமுதாயத்தினரும் பெண்களும் பா.ஜ.கவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.

தேர்தல் முடிவைப் பார்க்கும்போது பா.ஜ.க வின் எதிர்காலம் வளர்பிறையாகவும், மற்ற கட்சியின் எதிர்காலம் தேய்பிறையாகவும் உள்ளது என்பது புள்ளிவிவரம் தெளிவாக உள்ளது. கடந்தகாலத்தில் கொடிகட்டிப் பறந்த பகுஜன் சமாஜ் இப்போது செல்லாக்காசாகிவிட்டதைப் போல எதிர்காலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் செல்லாக்காசாகிவிடும் என்று அரசியல் நோக்கர்கள் சிலர் தெரிவித்துள்ள கருத்து உதாசீனத்தக்கதல்ல.

உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இழுபறி ஏற்படும் என்று சில கருத்துக் கணிப்புகள் கூறியது. தகர்த்தெறியப்பட்டுவிட்டது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பா.ஜ.கவை வெற்றி நடைபோட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு உதிறிக் கட்சிகள் பா.ஜ.கவுக்கு எதிராக தனித்தனியே போட்டியிட்டு செல்வாக்கை இழந்துவிட்டனர். காங்கிரஸும் ஏறத்தால காணாமல் போய்விட்டது.

உத்தராகண்டில் பா.ஜ.க இமாலய வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம். இந்த மலை மாநிலத்தில் பா.ஜ.கவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சொற்ப இடைவெளிதான் காணப்படுகிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் உத்தராகண்டில் அத்தகைய விபரீதம் எதுவும் நிகழவில்லை. கடந்த முறையைவிட சற்று அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக ஏறக்குறைய அரைசதம் இடங்களில் வெற்றிவாகையை சூடியுள்ளது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தது மட்டுமே பா.ஜ.கவுக்கு இழப்பாகும். மற்றபடி முக்கிய பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட்டனர்.

40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது எப்போது அசாதாரமானதுதான். கடந்த முறையும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் பா.ஜ.க ஆட்சியமைத்தது. கடந்த முறை 13 இடங்களில் வெற்றிபெற்றிருந்த பா.ஜ.க இப்போது 7 இடங்களைக் கூடுதலாகப் பெற்று 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த முறை 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது 5 அடங்களை இழந்து 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. கோவாவில் மதரீதியான பிரச்சாரத்தை பா.ஜ.கவுக்கு எதிராக எடுத்த கட்சிகளின் நிலை தவிடுபொடியாகிவிட்டது. கோவாவில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் உண்டு. பாரதீய ஜனதா கட்சி எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல என்ற கோட்பாட்டுக்கு கோவா வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது எனலாம்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பதை கருத்து கணிப்புகளும் தெரிவித்திருந்தன. ஆனால் ஆம் ஆத்மியின் அலை சுனாமி அளவுக்கு இருக்கும் என்பதை யாராளும் கணிக்க முடியவில்லை. காங்கிரஸ் மீதான மக்களின் ஆத்திரமே ஆம் ஆத்மிக்கு அணுகூலமாக மாறிவிட்டது.

அடவிவணங்கி