வன்முறையை தூண்டும் பி.பி.எம் கட்சி

மாலத்தீவுகளின் முற்போக்குக் கட்சி (பி.பி.எம்) என்ற முஸ்லிம் அரசியல் கட்சியின் உறுப்பினரான அப்பாஸ் அடில் ரிசா, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அரசியல் சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் பாரத தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில், கடந்த பிப்ரவரி 8, 2012 அன்று மாலத்தெவு அதிபர் முகமது நஷீத் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடந்த வன்முறைப் போராட்டங்களை குறித்து குறிப்பிட்டுள்ளார். நஷீத் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. நஷீத்தின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். நஷீத்தின் ஆதரவாளர்களின் இந்த வன்முறை போராட்டம், பாரத தூதரக அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது என்று அப்பாஸ் போலியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், இதற்கு நாம் இன்னும் பாரதத்தை பழிவாங்கவில்லை. எனவே அதனை பாரத தூதரகத்தை தாக்குவதில் இருந்து தொடங்குவோம் என வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் தன் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலத்தீவில் உள்ள ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளும் அப்பாஸின் இந்த டுவீட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பாரதம் எங்களின் நெருங்கிய அண்டை நாடு. எங்களுக்குத் தேவையான எல்லா நேரங்களிலும் அவர்கள் மாலத்தீவுக்காக எப்போதும் உதவி வருகின்றனர். நட்பு நாடுகளுக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான முயற்சியை கண்டிக்கிறோம் என கூறியுள்ளனர். இந்த வெறுப்பு பிரச்சாரத்தின் பின்னணியில் இருக்கும் முன்னாள் அதிபர் யாமீன், 2013 மற்றும் 2018க்கு இடையில் மாலத்தீவு அதிபராக இருந்த காலத்தில் சீனாவுக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.