ஒரு நாட்டின் அரசின் வசம் உள்ள தங்கத்தின் கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணம் அச்சிடப்படும். அப்போதுதான் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும், பணத்திற்கான உரிய மதிப்பு சந்தையில் இருக்கும். அவ்வகையில், நமது மத்திய அரசின் சீரிய முயற்சிகளால் தற்போது நமது பாரத ரிசர்வ் வங்கி வசம் இருக்கும் தங்கத்தின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது நம் நாட்டில் அரசின் வசம் இருக்கும் தங்கத்தின் அளவு 705.6 டன். இது ஒரு சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.
அண்மைக் காலமாகவே ரிசர்வ் வங்கி அதிகளவிலான தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே 29 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து உலகளவில் அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் ஒன்றாக பாரதம் உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு கடந்த 20 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர நமது மத்திய அரசின் வசம் உள்ள அன்னிய செலவாணி கையிருப்பும் 620 பில்லியன் டாலர் என்ற அளவில் வரலாறு காணாத சாதனையை படைத்துக்கொண்டுள்ளது.