ராமர் கோயில் கட்டும் பணி முதல் கட்ட நடவடிக்கை

அயோத்தியில் ராமா் கோயில் கட்டலாம் என்று கடந்த நவம்பா் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அத்துடன், 3 மாதங்களுக்குள் ராமா் கோயிலை கட்டுவதற்காகவும், அதனை மேற்பாா்வையிடுவதற்காகவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

திட்டமிட்டபடி குழு உறுப்பினர்கள் வருகிற பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் பட்சத்தில், 2020 மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 2 வரை சைத்ரா நவராத்திரியின் போது கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *