மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

மேற்குவங்கத்தில் ரேஷன் ஊழல் தொடர்பாக சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு ரேஷன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜன.,5) காலை, திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள புறப்பட்டு சென்றனர்.

 

சந்தேஷ்காலி பகுதி அருகே சென்றபோது, அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்களை சுற்றி வளைத்து தாக்கியதுடன், விரட்டி அடித்தனர். இதில் அவர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமானது; சில அதிகாரிகளுக்கு தலையில் ரத்தம் கொட்டியது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.