முஸ்லிம்களுக்கு தேசப்பற்றில்லையா?

பாரதப் பிரதமர் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு ‘இல்லம்தோறும் தேசியக்கொடி’ என்ற இயக்கத்தை தேசமெங்கும் முன்னெடுத்துள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் இந்து முன்னணி சார்பில், இன்று மாலை 4 மணி அளவில், குட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து உவரி நாவலடி வழியாக திசையன்விளை காமராஜர் சிலை வரை தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த உவரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள காவல் ஆய்வாளர், குட்டம் பள்ளிவாசல் தெருவில் தைஜா பள்ளிவாசல், பெருங்கொண்ட பாவா பள்ளிவாசல் உள்ளது, அக்கிராமத்தில் 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை என சில காரணங்களை கூறி வாகன பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளார். இதற்கு இந்து முன்னணி அமைப்பினரும் பொது மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி என்ன பாகிஸ்தானிலா உள்ளது, முஸ்லிம்களுக்கு தேசிய உணர்வில்லையா, அவர்களும் இந்த நாட்டில்தானே உள்ளனர், அல்லது காவல்துறையும் தமிழக அரசும் அப்படி கருதுகிறதா, ஒருசில தேசப்பற்றில்லாத சமூக விரோதிகளுக்கு பயந்து தேசியக்கொடி பேரணியை தடை செய்வதா, மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள இந்த ‘இல்லம்தோறும் தேசியக்கொடி’ இயக்கத்திற்கு காவல்துறை தடை விதிக்கலாமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர்.