முனாவர் பரூக்கி நிகழ்ச்சி ரத்து

முஸ்லிம் மதத்தை சேர்ந்த மேடை நகைச்சுவை கலைஞரான முனாவர் பரூக்கி தனது மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஹிந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவிப்பவர். பா.ஜ.க தலைவர்கள் குறித்தும் இழிவாக பேசுபவர். இது தொடர்பாக அவர் மீது வழக்குகள் உள்ளன. இதற்காக இவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். இவரது செயல்பாடுகளால் இவரது நிகழ்ச்சிக்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, முனவர் பரூகி டெல்லியில் இன்று மேடை நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டம் நடத்துவதாக எச்சரித்தன. இந்த சூழலில், டெல்லியில் இன்று நடைபெறவிருந்த முனாவர் பரூக்கியின் மேடை நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என கூறி டெல்லி காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.