மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மீனாட்சி க்ஷத்ரியா தன்னை ‘நி க்ஷய் மித்ரா’வாகப் பதிவு செய்து கொண்டதற்காகவும், காசநோயாளிகளை தமது சேமிப்பைக் கொண்டு பராமரித்த குறிப்பிடத்தக்க பணிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார். (நி க்ஷய் மித்ரா என்பது காச நோயாளிகளை பொதுமக்கள் தத்தெடுத்து அவர்களுக்கான ஊட்டச்சத்து, மருந்துகளை வழங்கும் ஒரு முயற்சி). மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “குறிப்பிடத்தக்க இந்த செயல், காசநோய் இல்லாத பாரதத்தை அடைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும்” என கூறியுள்ளார்.