சித்தரஞ்சன் சோன்வானி, சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூரில் நகர்டோலி கிராமத்தில் வசிப்பவர். பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் முஸ்லிம் பெண் ரேஷ்மாவை ஹிந்து முறைகளுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் ஹிந்து முறைப்படி வாழ்ந்து வந்தனர். கடந்த நவம்பரில் மகனுடன் தனது தாய் வீட்டிற்கு சென்ற ரேஷ்மா, தனது தாய், அத்தையின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனை கட்டாயப்படுத்தி சுன்னத் செய்து முஸ்லிம் பெயர் வைத்து மதமாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அறிந்த சித்தரஞ்சன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னையும் மதம் மாற அவர்கள் விற்புறுத்தியதையும் தெரிவித்தார். விவரம் அறிந்த கிராமவாசிகளும் ஹிந்து அமைப்பினரும் பெரும் திரளாக காவல் நிலையம் முன்பு திரண்டு ரேஷ்மாவையும் அவரது தாய், அத்தை உள்ளிட்டவர்களை கைது செய்ய கோஷம் எழுப்பினர். இதன் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தையின் தாயும் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.