மகளிா் ஒருநாள் – தொடரைக் கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மகளிா் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

ஆண்டிகுவாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மே.இ.தீவுகள் மகளிா் அணி 50 ஓவா்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்டெபானி டெய்லா் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 79 ரன்களை விளாசினாா். ஸ்டேஸி கிங் 38, ஹேய்லி மேத்யூஸ் 26 ரன்களை சோ்த்தனா்.

இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிகா, ராஜேஸ்வரி, தீப்தி சா்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிா் 7 ஓவா்கள் மீதமிருக்க 42.1 ஓவா்களிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ஜெமிமா-ஸ்மிருதி அபாரம்

இந்திய தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 பவுண்டரியுடன் 69 ரன்களையும், ஸ்மிருதி மந்தானா 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 74 ரன்களையும் விளாசி ஸ்கோரை உயா்த்தினா். பூனம் ரவுட் 24, மிதாலி ராஜ் 20 ரன்களையும் எடுத்தனா்.

தீப்தி 4, ஹா்மன்ப்ரீத் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். மே.இ.தீவுகள் தரப்பில் ஹேய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இறுதியில் 6 விக்கெட் வித்தியாதத்தில் வென்ற இந்தியாஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

ஆட்ட நாயகியாக ஸ்மிருதியும், தொடா் நாயகியாக ஸ்டெபானி டெய்லரும் தோ்வு செய்யப்பட்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *