புனரமைக்கப்பட்ட சர்ச்

ஜம்மு காஷ்மீரில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீநகரின் டல்கேட்டில் உள்ள நூற்றாண்டு பழமையான செயின்ட் லூக்கா கிறிஸ்தவ தேவாலயத்தை அம்மாநில அரசு புனரமைத்துள்ளது. முஸ்லிம் பயங்கரவாதத்தால் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்ட இந்த சர்ச் அப்பகுதி கிறிஸ்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமுயற்சி எடுத்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இதனை அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் சிறப்புப் பரிசாக கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி இங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. துணைநிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா அந்த சர்ச்சை திறந்து வைத்தார்.