காசி விஸ்வநாதர் கோயிலின் புனரமைப்புப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13ம் தேதி தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுமார் மூவாயிரம் மதத் தலைவர்கள், துறவிகள், கலைஞர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதனையொட்டி டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறும் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்நிகழ்ச்சி நாட்டில் 51 ஆயிரம் இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ‘திவ்ய காசி – பவ்ய காசி’ மூலம் கோடிக்கணக்கான பாரதியர்களின் கனவையும் லட்சியத்தையும் நனவாக்கி, உலக அரங்கில் பாரதத்தின் பழமையான கலாச்சாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளதாக பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர்.