பி.எப்.ஐ ஹிட் லிஸ்ட்

மதத் தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பினர், 100 பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கொலை செய்யும் நோக்கில் அவர்களின் பெயர்களை கொண்ட ஹிட் லிஸ்ட் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கேரள காவல்துறையினர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான எஸ்.கே ஸ்ரீனிவாசன் கொலை வழக்கு விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பா.ஜ.க இளைஞரணி தலைவர் பிரசாந்த் சிவன் உள்ளிட்டோர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கொல்லப்பட்ட ஸ்ரீனிவாசனும் பி.எப்.ஐயின் பட்டியலில் இருந்தார். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பி.எப்.ஐ உறுப்பினர்களின் அலைபேசிகளில் இருந்து இந்த ஹிட் லிஸ்ட்டை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

செய்தி ஆதாரம்: https://www.newsbharati.com/Encyc/2022/4/29/Radical-Islamic-organization-PFI-creates-a-hitlist-.html