பீகாரின் சகுனாமோரி பகுதியில் உள்ள முனிர் காலனியைச் சேர்ந்தவர் மர்கூப் அகமது டேனிஷ் என்ற தாஹிர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) உறுப்பினரான இவரை பாட்னா காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஏமன் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. புல்வாரி ஷெரீப்பில் உள்ள மதரசாவில் படித்த மர்கூப், பின்னர் துபாய் சென்று 12 ஆண்டுகள் தங்கினார். துபாயிலிருந்து திரும்பிய பிறகு, உள்ளூர் இளைஞர்களுக்கு குரான் கற்றுத் தந்தார். ‘கஸ்வா இ ஹிந்த்’ என்ற வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், பாரத வரைபடத்தில் பாகிஸ்தான் கொடியை அதன் சின்னமாக பயன்படுத்தினார். இந்த பாரத எதிர்ப்பு வாட்ஸ்அப் குழு பாகிஸ்தானில் உள்ள ஒருவரால் தொடங்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்களாக பாகிஸ்தான், ஏமன் போன்ற முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள். உள்ளனர். அவர்கள் இக்குழுவில் தொடர்ந்து முஸ்லிம் பயங்கரவாத செயல்களையும் கருத்துகளையும் பகிர்ந்து வந்தனர். பயங்கரவாதிகளை பெருமைப்படுத்தினர். பாரதத்தில் ஒரு முஸ்லிம் தேசத்தை நிறுவ அவர்கள் குழுவின் உறுப்பினர்களைத் தூண்டினர். மேலும், பாரதத்தை கைப்பற்றுவதற்கு வங்கதேச முஸ்லிம்கள் தயாராக வேண்டும். முஸ்லிம்கள் ஹிந்து சமய மரபுகள், கலாச்சாரத்தை கடைபிடிக்கக்கூடாது. பாரத தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும். பாரதம் முடிவடையும். என் நபியின் பெயர் எங்கும் ஆட்சி செய்யும் என்பது உள்ளிட்ட பல தேசவிரோத கருத்துகளை பகிர்ந்துள்ளனர். மர்கூப் பல்வேறு சமூக ஊடக தளங்களில் செயல்பாட்டில் இருந்துள்ளார். முஸ்லிம் பயங்கரவாதத்தை பிரச்சாரம் செய்வதற்காக வாட்ஸ்அப்பில் மூன்று குழுக்களை உருவாக்கினார். அவரது ஒரு குழுவில், 181 உறுப்பினர்கள் இருந்தனர், மற்ற இரண்டில் முறையே 10 மற்றும் 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். மார்கூப்பின் முகநூலை 2,000க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்ந்தனர், அவரது அனைத்து சமூக ஊடகத் தளத்திலும் அவர் இத்தகைய பயங்கரவாத கருத்துகளையே பரப்பிவந்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பீகார் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள பி.எப்.ஐ அலுவலகங்களைத் திறந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையிடம் கூறினர். இந்த இடங்களில் தீவிர சோதனை நடந்தது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதர் மற்றும் அர்மான் ஆகியோர், முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கும் பி.எப்.ஐ அமைப்பின் திட்டத்தின் விவரங்களை காவல்துறையினரிடம் வெளிப்படுத்தினர். ஸ்லீப்பர் செல் தொகுதிகளை விசாரிக்க எட்டு குழுக்களை காவல்துறை அமைத்துள்ளது என டைனிக் பாஸ்கர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.