பிரதமரை கொல்ல சிஐஏ பின்னிய சதி முறியடிப்பு

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அக்கிரமத்தின் முழு வடிவம் என்றே கருதப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதிலும், தலையாட்டி பொம்மை அரசுகளை பதவியில் அமர்த்துவதிலும் சி.ஐ.ஏ.க்கு பெரும்பங்கு உண்டு. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற பல நாடுகள் சி.ஐ.ஏ.யின் மறைமுக செயல்திட்டம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவில் அரசியல் நாடகத்தை சி.ஐ.ஏ. அரங்கேற்றி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் உள்ள தியான்ஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாட்டில் சில மாதங்களுக்கு முன் கலந்து கொண்டார். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காரில் பயணித்தபடி 45 நிமிடம் உரையாடினார்கள். இது சர்வதேச அளவில் பேசு பொருளானது.

இந்நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி டாக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமெரிக்க உயர் அதிகாரி டெரன்ஸ் ஆர்லெல்லே ஜாக்சனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் மார்டின் தீவில் பங்களாதேஷ் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையான காரணம் அல்ல. எப்படியாவது பிரதமர் மோடியை கொன்று விட வேண்டும் என்று சி.ஐ.ஏ. பின்னிய சதி வலையின் மையப் புள்ளி தான் டெரன்ஸ் ஆர்லெல்லே ஜாக்சன். இந்த சதித்திட்டத்தை பாரத உளவுப்பிரிவும், ரஷ்ய உளவுப் பிரிவும் கூட்டாக செயல்பட்டு, தூள் தூளாக்கி விட்டன.

எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய மாட்டோம். பாரதத்தின் இறையாண்மையை நீர்த்துப் போக விடமாட்டோம் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். மற்ற நாடுகளில் அராஜகத்தை அரங்கேற்றியதைப் போல பாரதத்திலும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சி.ஐ.ஏ. பின்னிய சதி தூள்தூளாகி விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக இவ்விவகாரம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் வார்த்தைக்குப் பின்னால் என்ன பொருள் இருக்கிறது என்பதை கூர்ந்து கவனித்தால் அவரது பேச்சு பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது.

சீனாவிலிருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2ம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற செமிகான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். ‘நான் சீனாவுக்கு சென்றதற்காக நீங்கள் கை தட்டினீர்களா? அல்லது சீனாவிலிருந்து திரும்பி வந்ததற்காக கை தட்டினீர்களா?’ என்ற நரேந்திர மோடியின் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அர்த்தச் செறிவு மிக்கது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி