சென்னையில் ஐ.டி வேலையில் இருக்கும் மணிகண்டன் பிரீதா தம்பதியர் தங்கள் குடும்ப ஆரோக்கியத்துக்காக நாட்டுமாடு வளர்க்க ஆர்வம் கொண்டனர். இதற்காக பயிற்சியும் எடுத்தனர்.
முதலில் ஒரு மாட்டை வாங்கினர். தேவைக்கு போக மீதம் உள்ள பாலையும், சாண எருவையும் அக்கம் பக்கத்தினருக்கு விற்றுள்ளனர். மேலும் பலர் கேட்கவே, அதிக மாடுகளை வாங்கி பராமரிக்க ஆட்களை வைத்துள்ளனர். தற்போது இவர்களிடம் 30 லட்சம் மதிப்புள்ள மாடுகள் உள்ளன.
பால், நெய், பனீர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சாணத்தில் இருந்து விபூதி, ஊதுவத்தி உள்ளிட்ட 30 பொருட்கள் தயாரிக்கப்பட்டு
விற்கப்படுகின்றன. இதில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், மாதம் 1.5 லட்சம் வருமானமும் வருகிறது.
இவர்கள் இன்னமும் தங்கள் ஐ.டி வேலையை தொடர்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.