படைக்கலன்கள் தயாரிப்பில் பாரதம் சர்வதேச அளவில் முதன்மை பெற்று வருகிறது. பாரத தயாரிப்புகளுக்கு விற்பனை வாய்ப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்தோனேசியா நமது தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது 200 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரையிலான பரிவர்த்தனையாக அமையக் கூடும். பிரம்மோஸ் ஏவுகணை துரிதத்துக்கும், துல்லியத்துக்கும், வீரியத்துக்கும் பெயர் பெற்றது. எந்த இலக்கையும் சரியாக குறி வைத்து தாக்கக்கூடியது. இது 290 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என்று கூறப்பட்டாலும், சூழ்நிலைக்கு ஏற்ப 800 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது. 15 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. ஆனால் அதே நேரத்தில், கடலையொட்டி 10 மீட்டர் உயரத்திலும் பறக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. கடலோரப் பாதுகாப்புக்கு இது மிகவும் நம்பகத்தன்மையுடைய தீர்க்கமான படைக்கலன் ஆகும்.
அடுத்தபடியாக சீனா – பாக் ஜே.எஃப் 17 குறித்து பார்ப்போம்:
நைஜீரியா இந்த போர் விமானங்கள் மூன்றை வாங்கியது. ஆனால் இதில் ஒன்றுதான் பயன்பாட்டில் உள்ளது. மற்ற இரண்டு போர் விமானங்களும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயன்பாட்டில் இல்லை. இவற்றுக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதும் எளிதல்ல. இந்த ஜே.எஃப் 17 விலை மலிவானது. ஆனால் அதே நேரத்தில் அதிக ஆற்றல் கொண்டது என்று கூறி விற்பனையைப் பெருக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது இதன் நம்பகத்தன்மை தகர்ந்து விட்டது. அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறது. எனவே இதன் செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஜே.எஃப் 17 போர் விமானங்களை வாங்கிய நைஜீரியா மட்டுமல்லாமல் மியான்மர், அசர்பஜைான் ஆகிய நாடுகளும் போர் விமானம் குறித்து புகார் கூறி வருகின்றன.
எந்தப் பொருளும் வாங்கியவருக்கு திருப்தி அளித்தால்தான் சம்பந்தப்பட்ட பொருளின் எதிர்கால உற்பத்தியும், விற்பனையும் ஓங்கும். மாறாக, பொருளை வாங்கியவர் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பொருளின் உற்பத்தியும், விற்பனையும் நாளடைவில் குறைந்து விடும். முன்னதற்கு உதாரணமாக நமது பிரம்மோஸ் ஏவுகணை உள்ளது. பிந்தைய நிலவரத்துக்கு உதாரணமாக ஜே.எஃப் 17 உள்ளது.
நமது பிரம்மோஸ் ஏவுகணை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சீனா – பாக் ஜே.எஃப் 17 அஸ்தமனத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி