பாதிரிகளின் பாலியல் கொடுமை

பிரான்சில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரி, சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 75 சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், அவருக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க சர்ச்களில், 1950 முதல் 2020 வரை நடைபெற்ற பாலியல் கொடுமைகள் குறித்து, ஜீன் மார்க் சாவி தலைமையில் விசாரணை ஆணையம் இரண்டரை ஆண்டுகளாக விசாரனை செய்து அறிக்கையை  கத்தோலிக்க தலைமை திருச்சபைக்கு அனுப்பியுள்ளது. அதில், கடந்த 70 ஆண்டுகளில் கத்தோலிக்க சர்ச்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பாதிரிகள் குறித்த ஆய்வில், 3,000 பேர் பாலியல் கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களால் சுமார் 3.30 லட்சம் சிறார்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். சர்ச்சுகளில், சிறார் மீதான பாலியல் கொடுமைகளை தடுப்பது தொடர்பாக இந்த ஆணையம் 45 பரிந்துரைகளை வழங்கியுள்ளது.