திருஷ்டி ஐ.ஏஎ.ஸ், விஷன் ஐ.ஏ.எஸ் போன்ற பயிற்சி நிறுவனங்களின் மதம் சார்ந்த செய்திகளை பரப்புதல், ஹிந்து மதத்தை இகழ்ந்து பேசுதல், அரசுக்கு எதிரான கருத்துகளை பகிர்வது போன்ற சமூக விரோத செயல்கள் சமீபத்தில் வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இக்ரா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை நடத்தி வரும் பிரபல ஐ.ஏஎ.ஸ் பயிற்சியாளரான அவத் ஓஜா என்பவர், முஸ்லிம்களையும் ஒசாமா பின்லேடன், தலிபான் போன்ற பயங்கரவாதிகளையும் புகழ்ந்து பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒசாமா பின்லேடனை மாபெரும் வீரனாக சித்தரித்த அவர், தலிபான் பயங்கரவாதிகளை ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள் போன்ற பெரும் போர் வீரர்களுடன் ஒப்பிட்டு புகழ்ந்தார். மேலும், இஸ்லாம் அமைதியின் மூலம் வளர்ந்தது அது வாட்களால் வளரவில்லை என்றும் இஸ்லாம் பெண்களுக்கு ‘விடுதலை’ அளித்துள்ளது என்றும் வரலாற்றை திரித்துக்கூறி பயிற்சி அளித்துள்ளார். அவரது வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள், இங்கு குறிப்பிட்டது அனைத்தும் பனிப்பாறையின் ஒரு சிறுமுனை மட்டுமே, வரலாறு குறித்த அவரது விரிவுரைகள் இன்னும் பெரிய சர்ச்சைக்குரியவை என்று கூறியுள்ளனர்.