பயன்படுத்திய சமையல் எண்ணெய் – உங்கள் உடல்நலத்திற்கு மோசமானது ஆனால் உங்கள் காருக்கு நல்லது !

நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ளுவதால் ஏற்படுகிறது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தப் போட்டி வாழ்க்கையில் மக்கள் தங்கள் பொருளாதார தேவையை சமாளிக்க வெளியூர்களில் சென்று வாழும் சந்தர்ப்ப சூழ்நிலையில் வெளியில் சாப்பிடுவதை தடுக்க முடியாத காரணத்தால் இதை தவிர்க்க முடியாது. ஆனால் மத்திய அரசு இதை சரிசெய்வதற்கு சில திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 10 உலக இயற்கை எரிபொருள் தினத்தை முன்னிட்டு பயன்படுத்திய சமையல் எண்ணெய்யில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தொடங்கியது. பயோ டீசல் ஆலைகளை அமைக்கும் புதிய தொழில்முனைவோருக்கு எண்ணை நிறுவனங்கள் விலை மற்றும் உற்பத்தியை முழுமையாக எடுத்துக் கொள்ளும் உத்தரவாதம் அளிக்கிறது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சேர்ந்து 100 நகரங்களில் உள்ள ஹோட்டல் உணவகங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஒருபுறம் உணவக துறையில் இருப்பவர்களை ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுபடியும் பயன்படுத்துவதை தவிக்கிறது. அதற்கு பதிலாக அதை எண்ணை நிறுவனங்களுக்கு விற்க வழி செய்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் சுகாதார நலன்களை தரும் மறுபுறம் இதன் பயன் இயற்கை எரிவாயு உற்பத்தியை பெருக்கி இறக்குமதி செலவை குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *