தி மு க தலைவர் ஸ்டாலின் என் ஐ ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தமிழகத்தில் சில முஸ்லீம் இளைஞர்களை திட்டமிட்டு சதி செய்து பிடித்து சென்று விசாரித்து வருகிறது என்ற கோணத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னெச்சரிக்கையாக பயங்கரவாதம் எந்த மதத்தின் நெறிமுறைகளுக்கும் ஏற்புடையதல்ல என்று பொதுவாக சொல்லிவிட்டு முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்வதை கண்டித்துள்ளார். அதாவது வேலூரில் தேர்தல் நேரம் என்பதாலும் அவர்களின் ஒட்டுமொத்த ஓட்டும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையாலும் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் தெலுங்கானாவிலும் கர்நாடகத்திலும் உள்ள சில இளைஞர்கள் தேசிய புலனாய்வு அமைப்பில், விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி, ராமநாதபுரம் கீழக்கரை நெல்லை தென்காசி, கடலூர் தேங்காய்பட்டினம், சென்னை மண்ணடி போன்ற இடங்களில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் அன்சருல்லா என்ற அமைப்பாக செயல்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு போன்று தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தாய் தந்தையர் யாரும் இந்த குற்றசாட்டை மறுக்கவில்லை அவர்களின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியீடுகிறார் என்பது கேள்விக்குரியானது. கேரளத்து கம்யூனிஸ்ட் அரசாங்கம் எந்த அளவுக்கு முஸ்லிம்களுக்காக வேலைசெய்யும் என்பது ஊரறிந்த ஓன்று. அதேபோல் தெலுங்கானா அரசும் கர்நாடக முந்தைய காங்கிரஸ் அரசும் எந்த அளவுக்கு முஸ்லிம்களை தாஜா செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்கள் எல்லாம் இதனை எதிர்க்காமல் தகுந்த ஒத்துழைப்பு கொடுப்பது ஸ்டாலினுக்கு எரிச்சலை தருகிறது. அவர்களை நேரடியாக கண்டித்தால் தனது எதிர்கால முதல்வர் கனவுக்கு ஆபத்தாய் அமையும் என்பதால் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல் எவ்வளவு அடித்தாலும் தங்குவான் என்ற வடிவேலு காமடி போன்று ஆளும் அ தி மு க அரசை குறைகூறியுள்ளார் .
தனது தந்தையின் ஆட்சியில் கேரளத்து மதானியையும் கோவை வெடிகுண்டு ஆசாமி பாட்சா-வையும் சிறையில் ராஜபோகமாய் வளர்த்து குறைந்த பட்ச தண்டனையோடு விடுதலை செய்தது நினைவுக்கு வரலாம் அப்படி எதையும் தன்னிச்சையாக வேண்டியவர்களுக்கு உத்தரவு கொடுத்து தீர்ப்பு பெரும் நிலையில் இன்றைய நீதிமன்றங்கள் இல்லை என்பதை ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசின் திறமைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் ஓவ்வொரு கேஸிலும் தங்கள் இஷ்டப்படி செயல்படும் ஏவலாளிகள் போல உத்தரவிடும் அதிகார மமதை கொண்ட திராவிட ஆட்சிகளின் வரலாறே போலீஸின் இந்த பரிதாபகர நிலைக்கு காரணம் அன்று தொண்டியில் இங்கும் முஸ்லீம் படைகள் தயார் என்று சில இளைஞர்கள் ஐ எஸ் ஐ எஸ் பனியனுடன் பேஸ் புக்கில் போட்டோ பதிவு செய்த போதே சரியான, கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வளவு தைரியத்தோடு அதுவும் அயல்நாட்டில் வேலை செய்துகொண்டு தாய்நாட்டில் பயங்கரவாத வன்முறை நடவடிக்கைகளை செய்ய நினைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை தராமல் மாப்பிளை மரியாதையை தரவேண்டும் என்கிறாரா ஸ்டாலின். துபாயில் இருந்து கொண்டு நிதி வசூல் செய்து பயங்கரவாத இயக்கமான பெயரில் இந்தியாவுக்கு அனுப்பியதை கையும் களவுமாக பிடித்து இந்தியாவிடம் ஓப்படைத்ததே முஸ்லீம் நாடான துபாய்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார் ஸ்டாலின். கொஞ்சமாவது நாட்டின் மீது பற்று இருந்தால் ஸ்டாலின் இப்படியொரு அறிக்கையை விடுவாரா எல்லாம் ஓட்டு பிச்சைகளின் கோமாளித்தனமான அறிக்கைகள் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளவும் மக்கள் இந்த தருணத்தில் உஷாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் இத்தகையவர்கள் நாட்டை யாருக்கு வேண்டுமானாலும் விலை பேசவும் தயங்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை.
இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்கா பறிக்கும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . உண்மையில் நாட்டு நலனில் அக்கறை இருந்தால் அல்லது முஸ்லீம் இளைஞர்கள்மீது அக்கறை இருந்தால் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் இந்தியாவிற்கு இது நல்லதல்ல . இது இஸ்லாமியநாடும் அல்ல என்றல்லவா அறிக்கை விட்டிருக்க வேண்டும் அதை விட்டு விட்டு அவர்களின் ஈனச்செயலை கண்டிக்காமல் NIA வை துன்புறுத்துவதாக அறிக்கை வெளியிடுவது ஸ்டாலின் போன்ற முன்னணி கட்சித் தலைவருக்கு அழகல்ல.