ந. ரங்கசாமி முதலமைச்சர் புதுச்சேரி அரசு வாழ்த்து செய்தி

இந்திய கலாச்சாரம்மற்றும் மரபுகளின் அடிப்படையில் ஒற்றுமையான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவது என்கிற நோக்கத்துடன், 1925ஆம் ஆண்டு டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவரால் நாக்பூரில், ஒரு கலாச்சார அமைப்பாகத் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது, தனது நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தேசம் தான் முதலில் என்கிற கொள்கையாலும்,‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற நோக்கத்தோடும் வழிநடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு, பல கடினமான காலகட்டங்களைக் கடந்து, இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்பாக வளர்ந்து நிற்பதற்கு காரணம், தேசத்திற்கும், சமூகத்திற்கும் செய்து வரும் அயராத சேவையே ஆகும். அதுமட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் இந்த அமைப்பு மேற்கொண்டுவரும் பணிகள் பெரிதும் பாராட்டுக்குரியவையாக உள்ளன.

சமூக அர்ப்பணிப்புள்ள ஒரு நல்ல இயக்கமாக நூறாண்டுகளைத் தொட்ட ஆர்.எஸ்.எஸ். நமது தேசத்தின் முழுமையான வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் இன்னும் பல நூற்றாண்டுகள் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்று  கூறி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த காரியகர்த்தாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.