தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையம் முன்பு இருந்த விநாயகர் கோயில் 2026 ஆகஸ்ட் மாதம் 19ல், ரயில்வே துறை மற்றும் காவல்துறையால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயில் ஆகும். நூறாண்டுகளுக்கு முன்பு குரும்பூர் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டபோது, அங்கிருந்த பணியாளர்கள் வழிபடுவதற்காக உருவாக்கிய கோயில் ஆகும்.
குரும்பூர் ரயில் நிலையம் முன்பிருந்த விநாயகர் கோயில் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் ரயில்நிலையம் முன்பு சாலை ஓரத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்தது. இந்த இடத்திலிருந்து சுமார் 500 அடி தூரத்தில், மோகன் சி லாசரஸ் என்கின்ற கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் நடத்தி வரும் “வானத்தின் வாசல்” ஜெபக்கூடம் உள்ளது. இந்த ஜெபக்கூடத்திற்கு வரும் வாகனங்கள் ரயில்வே துறைக்கு சொந்தமான இந்த விநாயகர் கோயில் அருகில் உள்ள மைதானத்தில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டு வந்தது.
ஜெபக்கூடத்தின் அருகில் விநாயகர் சிலை இருப்பது மோகன் சி லாசரத்திற்கு பிடிக்கவில்லையா? தெரியவில்லை. அவரது முழுமையான தூண்டுதலில் தான், அவரது ஜெபக்கூடத்திற்கு வந்து செல்லும் ரயில் நிலைய ரயில்வே உயர் அதிகாரி பிரவீனா மற்றும் மேத்யூ என்கின்ற இரண்டு கிறிஸ்தவ அதிகாரிகளின் முழு முயற்சியில்தான் மேற்படி விநாயகர் கோயில் இடிக்கப்பட்டது. தென்னக ரயில்வே துறையில் மோகன் சி லாசரஸ் எந்த அளவிற்கு தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வருகிறார் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது.
நூறாண்டு குரும்பூர் ரயில்வே நிலையத்தில், 2012 ஆம் ஆண்டு ரயில்வே பிளாட்பாரம் திறக்கப்பட்ட கல்வெட்டில் இரண்டு பெயர்கள் மட்டுமே உள்ளன. ஒன்று அதனை திறந்து வைத்த ரயில்வே உயர் அதிகாரியின் பெயர், மற்றொன்று மோகன் சி லாசரஸ் பெயர். ரயில்வே கோட்ட அதிகாரிகள் பெயரோ, ரயில்வே நிலைய அதிகாரியின் பெயரோ, யாருடைய பெயரும் கிடையாது. ஆனால் மோகன் சி லாசரஸ் பெயர் மட்டும் உள்ளது என்றால், எந்த அளவிற்கு தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தை மோகன் சி லாசரஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னக ரயில்வே மோகன் சி லாசரஸ் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அதன் காரணமாகத்தான், குரும்பூர் ரயில் நிலையம் முன்பிருந்து குரும்பூர் ரயில்வே கேட் வரை, குரும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக ரயில்வே துறையின் இடத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தார் சாலையால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு, எந்த பயனும் கிடையாது. மெயின் ரோட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு வரும் தென்வடல் சாலை மட்டுமே, ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல உதவும். போடப்பட்டுள்ள இந்த சாலை, ரயில் நிலையத்திலிருந்து மோகன் சி லாசரஸ் ஜெபக் கூட்டத்திற்கு செல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த சாலையை ரயில்வே துறை அமைத்துள்ளது என்றால், மோகன் சி லாசரஸ் தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தை எந்த அளவுக்கு இயக்கி வருகிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குரும்பூர் ரயில்வே கேட்டில் இருந்து அங்கமங்கலம் – திருச்செந்தூர் மெயின் ரோடு வரை, ஏற்கனவே ஒரு சாலை உள்ளது. அந்த சாலை மோகன் சி லாசரஸ் ஜெபக் கூட்டத்தின் முன்புறம் வழியாக செல்லும். அந்த சாலையில் பேருந்துகள் சென்றால், மோகன் சி லாசரஸ் ஜெபக் கூட்டத்தின் முன்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக குரும்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து ரயில்வே கேட் வரை கிழக்கு மேற்காக இந்த சாலை போடப்பட்டுள்ளது.
ரயில்வே துறை மட்டுமல்ல, ரயில்வே கேட்டில் இருந்து அங்கமங்கலம் வரை தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை முழுவதும் மோகன் சி லாசரஸ் குழுவால் அக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் உள்ளே மேரி மாதா சிலை உள்ளது. அதனை அகற்ற இயலாத தென்னக ரயில்வே துறையால் இயலவில்லை.
கோவை ரயில் நிலையத்தின் உள்ளே மசூதி உள்ளது. அதற்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, மாற்று இடத்தில் புதிய மசூதி கட்டப்பட்ட பின்பும் ரயில் நிலையத்தில் உள்ள மசூதியை இடிக்க இயலாத ரயில்வே துறை, கிறிஸ்தவ அதிகாரிகளால் மோகன் சி லாசரஸ் தூண்டுதலில், குரும்பூர் ரயில்வே நிலைய விநாயகர் கோயிலை இடித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மத்திய அரசின் மீது ஹிந்துக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கோயிலை இடிப்பதற்கு உறுதுணையாக இருந்த கிறிஸ்தவ ரயில்வே அதிகாரிகள் பிரவீனா, மேத்யூ ஆகியோர் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்கள் முன்புள்ள விநாயகர் கோயிலை அப்புறப்படுத்துவதற்கும், தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த விநாயகர் கோயிலை இடிப்பதற்கு தமிழக அரசின் காவல்துறை இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான போலீசாரை இறக்கி, கோயில் என்றும் பாராமல் பூட்ஸ் காலோடு உள்ளே நுழைந்து, அங்கே யாகம் நடத்தி வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்களை தரதரவென இழுத்து அப்புறப்படுத்தி, யாகசாலையை எட்டி உதைத்து, விநாயகரை எடுத்து சென்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த விநாயகரை சிறை பிடித்து வைத்துள்ளனர். மத்திய – மாநில அரசுத் துறை நிறுவனங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் எந்த அளவிற்கு அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.
கட்டுரையாளர்: வழக்கறிஞர்,
இந்து முன்னணி மாநிலச் செயலாளர்