நாட்டை இழிவுப் படுத்தும் இந்தியர்கள்

பர்கா தத் என்ற ஊடகவியாளர், தனது டுவிட்டரில், இறந்த பயங்கரவாதிகள் எங்கே என பாலாகோட் பகுதியில் உள்ள விவசாயிகள் கேள்வி கேட்கிறார்கள் என இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தவில்லை என்பது போல் பேசும் அநாகரிகமான செயலை செய்துள்ளார். ராஜ்தீப் தேசாய் மற்றும் அவரது மனைவி சாகரிகா கோஷ் இருவரும் இந்தியர்களாக இருப்பதற்கு பதில், பாகிஸ்தானியாராகவே மாறி தொலைக்காட்சி விவாதங்களிலும், டுவிட்டரிலும் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாக நடந்துள்ளார்கள். ‘‘அணுகுண்டு யுத்தத்திற்கு காஷ்மீரை தளமாக மாற்ற மோடி முயலுகிறார்.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரும்,  பல்வேறு அமைப்புகளும் மோடியின் இந்த செயலை தடுக்க வேண்டும். போல், இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக வீரமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் கிரிக்கெட்  வீரர் இம்ரான்கான்” என சாகரிகா பேசுகிறார்.

‘‘பா.ஜ.க. புல்வாமா படுகொலை, விமான படை தாக்குதல் இவற்றை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது”. என சர்தீப் தேசாய் தனது டுவிட்டரில் பதிய விட்டுள்ளார். இதையே டெய்லி ஓ என்ற இணையதளம் குறிப்பிட்டு, இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கட்டுரை எழுதியுள்ளது. ஷாபஸல் என்ற காஷ்மீரி, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக தனது அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல்வாதியாக உருமாறியவர்.  பாரத விமானப்படை விங் கமண்டர் அபிநந்தனை விடுதலை செய்தமைக்காக இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்கிறார் இவர்.  இந்த செய்தியை தொடர்ந்து பாகிஸ்தான் டி.வி. ஒலிபரப்புகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்,  இந்துரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி, இம்ரான்கானை புகழ்ந்துள்ளார்.  பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை விங் கமண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது பாராட்டத்தக்கது என்றார். 21 கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், விமானப் படையினரின் தன்னலமற்ற தியாகத்தை, ஆளும்கட்சி அப்பட்டமான மோசமான அரசியல் செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பேசி, பாகிஸ்தான் இந்தியாவின் மீது குற்றச்சாட்டுகளை வைக்க இதையே ஆதராமாக காட்டும் அவல நிலையை ஏற்படுத்தியுள்ளன.

புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை கொன்ற பாகிஸ்தானுடன் 2019- ஜூன் மாதம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.  இந்தியர்களில் பெரும்பாலோனோர் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில்  கிரிக்கெட் வேறு, பகைமை வேறு என்று கிரிக்கெட் வீரர்கள் தத்துவம் பேசுகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *