சீன அச்சுறுத்தலுக்கு பிறகு பாரதத்தின் எவுகணை சோதனைகள் அதிகரித்துள்ளன. இது 2021ம் ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 800 கி.மீ தூரம் செல்லத்தக்க பிரம்மோஸ் சோதனை, ஏர் இண்டிபெண்டன்ஸ் புரோபல்ஷன் சோதனை, 800 முதல் 1000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய நிர்பயா குரூஸ் ஏவுகணை, விமானங்களை வானில் வைத்தே அழிக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையின் இரண்டாம் கட்ட சோதனை, ரஸ்டம் — 2 ஆளில்லா விமானம் போன்றவை அடுத்த ஆறு மாதங்களுக்குள் சோதனை செய்து பார்க்கப்படும் என தெரிகிறது.