சீனா வரையறுக்க மறுத்து வரும் பாரத − -சீன எல்லையோர பாரத மாநிலம் அருணாச்சல் பிரதேசம். 60 எம்.எல்.ஏக்கள் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவையில், காங்கிரஸ் 44 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியில் இருந்தது. 2021ல் பெமா கண்டு தலைமையில் 43 பேர், பா.ஜ.க கூட்டணிக் கட்சியில் இணைந்தார்கள். பா.ஜ.க கூட்டணியின் ஆட்சி அமைந்தது. முதல்வரானார் பெமா கண்டு. மத்திய அரசுடன் சுமுகமான உறவு இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சி காண முடியும் என்று தான் உணர்ந்ததாலேயே இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் அப்போது தெரிவித்தார். அவர் எண்ணப்படியே அருணாச்சல் பிரதேசம் வளர்ச்சி கண்டு வருகிறது.
எதற்கு இந்த பழைய அருணாச்சல் பிரதேச கதை என்கிறீர்களா? மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி ஆட்சி அமைத்தபின், மமதா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர் ஏதோ ஒரு கட்சியில் இணைந்து பா.ஜ.க.விடம் நேசக்கரம் நீட்டினார்கள். முன்பு மத்திய அரசுடன் முறைக்கும் போக்கை கடைபிடித்த மமதா தர்பாரால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்ததே, அந்த பரிதாப நிலையை மாற்றுவதே தங்கள் விருப்பம் என்று இவர்களும் பெமா கண்டு போலவே பேசினார்கள்.
அதாவது அருணாச்சலும், மேற்குவங்கமும் தங்கள் மாநில வளர்ச்சிக்காக தேர்வு செய்யும் உத்தி ‘கூட்டுறவு சார் கூட்டாட்சி’ (கோவாபரேட்டிவ் பெடரலிசம்). அதாவது, மத்திய அரசுடன் தங்கள் மாநில அரசின் உறவு உணர்வு பூர்வமாக அமைய வேண்டும் என்பதே (அண்மையில் தமிழகத்தில் சட்டப் பேரவை வரை அதிர்வுகளை ஏற்படுத்திய ‘குதிரை பேரம்’ முற்றிலும் வேறு சங்கதி. கோடிகளை கொடுத்து மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் அந்த தீமை, ஜனநாயகத்துக்கே குழி பறிக்கும் அரசியல் சதி).
இங்கே, அருணாச்சல், மேற்குவங்க சம்பவங்களை இப்போது சுட்டிக்காட்டுவதன் நோக்கம், அந்த இரு மாநிலங்களின் சீரான வளர்ச்சிக்கு வழி பிறந்த விதத்தைத் தெரிவிப்பதுடன், தொடர்ந்து நமக்கு தொல்லை தரும் சீனாவுடனும், பங்களாதேஷுடனும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அந்த இரு எல்லை மாநிலங்களில் தேசப்பாதுகாப்புக்கு உள்ள கூடுதல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதும்தான்.
விஜயபாரத த்திற்கு முதன்மை ஆசிரியர்
மூத்த பத்திரிகையாளர் திரு. இராம. நம்பி நாராயணன் அவர்கள், கடந்த ஆகஸ்ட் 8, 2026 அன்று விஜயபாரதம் வார இதழின் முதன்மை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரது பணி சிறக்க நிர்வாகம் வாழ்த்து தெரிவிக்கிறது.
− நிர்வாகி