தெற்கிலிருந்து ஒரு புயல் பீதி; ஒரு பீதிப் புயல்

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் சர்ச்சுகளில் சுமார் 250 பேர் பலியாகியிருக்கிறார்கள். முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. பொதுவாக முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லை. ஆனால் பயங்கரவாதிகளில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. இஸ்லாமும், கிறிஸ்தவமும் வெறும் மதங்கள் மட்டுமில்லை. அங்கு ஆன்மிகம், பக்தி, போன்றவற்றுக்கு இடமில்லை. வெறும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றத் துடிக்கும் அரசியல் இயக்கம்தான் அந்த இரண்டும்.

இலங்கை சம்பவத்திற்கு கோவையில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் உடந்தையாக இருந்தார்களா என்ற ரீதியில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்களில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. முஸ்லிம்களை திருப்தி படுத்துவதற்காகவும், அவர்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகவுமே இத்தகைய போக்குகள் நடைபெறுகின்றன. தடை செய்யப்பட்ட சிமி இயக்கம்தான் வெவ்வேறு பெயர்களில் உலா வருகிறது. இவர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் வாக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திராவிட இயக்கங்கள் இவர்களுக்கு தேர்தலில் இடமும் கொடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்தப் போக்கு ஆபத்தானது.

அரசு பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

   பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக காவல்துறையில் தகவல் தெரிவிக்கவேண்டும்.

 சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டால் காவல்துறையை உஷார் படுத்தவேண்டும்.

 வீடு வாடகைக்கு கொடுக்கும்போது வீட்டு சொந்தக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

ஏப்ரல் கடைசியில் புயல் வருது என்று ஊடகம் பீதி கிளப்புகிற தொனியில் பேசுகிறது என்றால், பீதி என்ற புயலைக் கிளப்பவும் விஷமிகள் முயற்சிக்கக் கூடும். உஷார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *