தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் சிறுசேரி, பாதிரிவேடு போன்ற பல இடங்களில் ஐடி நிறுவன பெண்கள் இரவு நேர வேலை முடித்து வீடு திரும்பும் போது, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மக்களை உலுக்கின. அவற்றில் பல சம்பவங்கள் இருட்டில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நடந்தன. ஆனால் தற்போது தேசத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரும் ‘கார்ப்பரேட் ஜிகாத்’ சம்பவங்கள் அலுவலக வளாகத்தில் பட்டப் பகலில் பலர் முன்னிலையில் அரங்கேற்றப்படுகின்றன; பாதிக்கப்பட்ட பெண்கள் நிலை பரிதாபம் என்பதுதான் குரூரம். புதல்விகளை இதுபோன்ற நிறுவனங்களுக்கு பணிக்கு அனுப்பும் தமிழக ஹிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் உஷாராக வேண்டிய நேரம் இது.
பாரதத்தை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு பெயர்களில் மதமாற்ற நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ‘லவ் ஜிகாத்’, ‘லேன்ட் ஜிகாத்’ வரிசையில் தற்போது பெருவர்த்தக ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஹிந்துப் பெண்களை மதமாற்ற சூழ்ச்சி நடப்பது ஏப்ரல் 10 அன்று நாசிக்கில் அம்பலமானது. அங்கே டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் பணியாற்றிய பெண்கள் கொடுத்த புகார்களால், ‘கார்பரேட் ஜிகாத்’ என்ற அந்த தேசத் துரோக சதி வலையை அறுத்தெறிய வழி பிறந்தது.
பெண் ஊழியர்களின் நடத்தையில், வாழ்க்கை முறையில் திடீர் மாற்றங்கள் காணப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர்கள் பாரம்பரிய ஹிந்து பழக்க வழக்கங்களிலிருந்து விலகத் தொடங்கினர், ரமலான் மாதத்தில் விரதம் இருப்பது என பலதும் தென்பட்டது. தங்களது நண்பர்களிடமிருந்தும், சமூக வட்டங்களிலிருந்தும் அவர்கள் விலகலானார்கள்.
இந்த நாசிக் பெண்கள் பயம், சமூக அழுத்தம், வேலையை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஆகியவற்றின் காரணமாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தனர்; இருப்பினும், நிலைமை தாங்க முடியாததாக மாறியதால், ஒன்பது பெண் ஊழியர்களும், ஒரு ஆண் ஊழியரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகி, பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்காக மகாராஷ்டிர அரசு நியமித்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாணையின் மூலம், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், மதரீதியான முறைகேடுகள் ஆகியவை வெளிச்சத்துக்கு வந்தன.
கார்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் முஸ்லிம்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஹிந்து ஊழியர்களை குறிவைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதம் மாறச் சம்மதிப்பவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற புகார்கள் வேறு. அலுவலகச் சூழலில் முஸ்லிம்கள் மற்ற மதங்களை தரக்குறைவாகப் பேசுவது, முஸ்லிம் மதக் கொள்கைகளை ஏற்கச் சொல்லி மறைமுகமாக வற்புறுத்துவது … இது தொடர் கதையாகவே ஆகியிருந்தது.
இது ஒரு திட்டமிட்ட சதி வலைப்பின்னல். எப்படி? பெரிய நிறுவனங்களின் மனிதவளத்துறை (HR) மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் முஸ்லிம்கள் ஊடுருவி, பொருளாதார ரீதியாகப் பலவீனமான அல்லது தனிப்பட்ட சிக்கல்களில் இருக்கும் ஊழியர்களைக் கண்டறிந்து, அவர்களை மதமாற்றத்திற்குத் தூண்டுவது தற்போது நாடறிந்த செய்தி. இந்தச் சூழ்நிலையை எதிர்த்த அல்லது அதிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள முயன்ற எந்தவொரு ஊழியரும் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சில சமயங்களில், அவர்களது குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு மிரட்டும் முயற்சியும் நடந்தது.
நாசிக்கில் உள்ள டி.சி.எஸ் (TCS) பணியாற்றிய பெண் ஊழியர்கள், தங்களுக்கு அங்கு பணியாற்றிய சில சக ஊழியர்களிடம் இருந்து பாலியல் ரீதியான தொல்லைகளும், மத கெடுபிடிகளும் ஏற்பட்டதாக சொன்னார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களைச் சில ஊழியர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அலுவலகத்தில் குறிப்பிட்ட மதச்சடங்குகளைப் பின்பற்ற சொன்னதாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்தார்கள். பெண் ஊழியர்கள் புர்கா அணியவும் தொழுகை நடத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். நிறுவனத்தின் மனிதவள ஹெச்.ஆர் (HR) மேலாளரிடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2026 ஜனவரியில் புனேவில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தில் 24 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. இருப்பினும், தற்போது நாசிக் அலுவலகத்தில் நடந்துள்ள பாலியல் / மத நிர்பந்த விவகாரமே நாடுநெடுக காட்டுத் தீ போல பரவி வருகிறது.
விலங்குகளுக்கு விலங்கு
பல ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தில் 36 வயதான டீம் லீடர் ஷஃபி ஷேக் அத்துமீறல்களை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதாக சீறுகிறார் பாதிக்கப்பட்ட ஒருவர். ஷஃபி ஷேக் அலுவலக கூட்டங்களின் போது, பாலியலுக்கு தூண்டும் விதமாக செய்கைகளை செய்வதுண்டாம். இது குறித்து நிதின் கபூர், தீபக் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை என்றும் அவர் கூறினார். 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், அட்டகாசம் செய்து வந்த இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தௌசிஃப் அத்தார், டேனிஷ் ஷேக், ரஸா மேமன், ஷாருக்கான் குரேஷி, ஆசிஃப் அன்சாரி, ஷஃபி ஷேக், அஸ்வினி செனானி என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் அம்சம் வெளிப்பட்டுள்ளது. “வார இறுதிப் பயணங்கள்” என்ற போர்வையில் ஊழியர்கள் பெரிய ரிசார்ட்டுகளுக்கோ அல்லது பூங்காக்களுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, முறையற்ற நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மனரீதியாக உடைக்கும் நோக்கில், இந்த அக்கிரமம் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் ஹிந்துப் பெண்கள், தங்கள் வாக்குமூலங்களை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினார்கள். எனவே பிடிபட்ட புள்ளிகளின் கழுத்தை சட்டக் கயிறு இறுக்குவது உறுதி.
அக்கிரமங்களின் அணிவகுப்பு
** பாதிக்கப்பட்ட 25 வயது ஹிந்துப் பெண் ஒருவர், 2025 மே மாதத்தில் திங்கட்கிழமை விரதம் இருந்த போது குற்றம் சாட்டப்பட்ட தௌசிஃப், அவரது மேஜையில் இருந்த சிவன் சிலையைப் பார்த்து ஹிந்து தெய்வங்களை கேலி செய்துள்ளார்.
** பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புனேவில் வசிக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட ரஸா மேமன் அவரிடம், ‘நீ ஏன் உன் கணவருடன் வாழவில்லை? தேனிலவுக்கு எங்கே சென்றாய்? அங்கே என்ன செய்தாய், எப்படி?’ என்று கேட்பார் என அப்பெண் கூறினார். ஆசிஃப் அன்சாரி மதிய உணவின்போது அப்பெண்ணின் தொடையில் கை வைத்து, ‘உனக்கு உடல் இன்பம் வேண்டுமென்றால், என்னிடம் சொல், நான் தருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
** ஷஃபி ஷேக், வேலை என்ற போர்வையில் தன்னிடம் நெருங்கி வந்து, தன் பாதங்களை அவளுடைய பாதங்களில் தேய்ப்பார் என்றும், தன் முகத்தை அருகில் கொண்டு வந்து தொடுவார் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார்.
டிசிஎஸ்ஸில் நடந்த சம்பவத்திற்கு பின்னர், தொண்டு நிறுவனங்களிலும் ‘கார்பரேட் ஜிகாத்’ நச்சரவம் தென்பட்டிருக்கிறது. முஸ்லிம் அமைப்புகள் நடத்தும் சில தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஹிந்துப் பெண்களை மதமாற்றத்திற்கு கட்டாயப் படுத்துவது தெரிய வருகிறது. நாக்பூரில் உள்ள மன்காபூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ரியாஸ் காஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ரியாஸ் காஜி பிக்கர் பவுன்டேஷன் (Bigger Foundation), பதே ஹம் பதாயே ஹம் (Pahtey Hum Bataye Hum) என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மேற்படி நிறுவனத்தில் பணிபுரிந்த 23 முதல் 26 வயதுடைய ஹிந்துப் பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மத நடைமுறைகளைப் பின்பற்ற வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அலுவலகத்திலேயே தொழுகை (Namaz) செய்யச் சொல்லியும், நோன்பு (Roza) இருக்கச் சொல்லியும், துவா (Dua) ஓதச் சொல்லியும், ரியாஸ் காஜி வற்புறுத்தியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புகாரில், பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். மதமாற்ற வற்புறுத்தல் மட்டுமின்றி, பெண் ஊழியர்களிடம் கீழ்த்தரமாக நடந்து (Molestation), இணையவழி துன்புறுத்தலில் (Cyber Harassment) இறங்கியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன. நாசிக் போல் மற்ற மாநிலங்களிலும் நடத்திருக்கலாம். ஹைதராபாத்தில் லட்சக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பணியிடம் தொழில் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, வற்புறுத்தல், துன்புறுத்தல், மதரீதியான இலக்கு வைத்தல் இவற்றில் இறங்கும் கும்பல்களை வாலாட்ட விடக்கூடாது. தெலுங்கானா வாய்மூடி இருந்து விவகாரம் முற்ற விடக் கூடாது என்று எக்ஸ் தளத்தில் காவல்துறையை உஷார்படுத்தி பதிவுகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. கர்நாடகத்தில் ஐ.டி நிறுவனங்களின் விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று பாஜக மாநில காங்கிரஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் போலித்தனமாக “அமைதிப் பூங்கா” கிரீடம் அணிந்து உலா வருமா, அல்லது இங்கும் ஹிந்து விரோத சதிகார நச்சரவங்கள் வேட்டையாடப்படுமா?