துளி ஈரம் துயர் தீரும்

அட்சய திருதியை – தண்ணீருக்கு தவம்

அட்சய திருதியை மே மாதம் 7ம் தேதி வருகிறது. அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஊருக்கே இன்றைய உடனடி தேவை தண்ணீர். போன முறை சிலர் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம். எனவே அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை வீட்டில் சாமி படத்தின் முன்  வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யலாமே?

நீர் தட்டுப்பாடு : நீதிமன்றக் கவலை

அரசு மேகத்தில் மருந்து தெளித்து மழை வரச் செய்யலாமே என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மாநில அரசுக்கு யோசனை சொல்லியுள்ளது. கடற்கரையோரப் பகுதிகளில் பெரு வர்த்தக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை வைத்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை அரசு   செயல்படுத்தலாமே என்பது அந்த நீதிமன்றத்தின் இன்னொரு யோசனை. போதிய அளவு மழை பெய்யவில்லை, நிலத்தடி நீரும் கீழே கீழே போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் புதிய புதிய வழிமுறைகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரர் கோரினார், அந்த மனு மீது  கருத்துக் கூறுகையில் நீதிபதிகள் அரசுக்கு இவ்வாறு யோசனை சொன்னார்கள்.

 • துணி துவைக்கும்போது பக்கெட் நிரம்பிய பின்னரே அலசுங்கள். குழாயைத் திறந்துவிட்டுக்
  கொண்டே துணிகளை அலசும்போது நீர் வீணாவது தெரியவே தெரியாது.
 • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து காய்கறிகளையும், பழங்களையும் கழுவுங்கள். குழா
  யைத் திறந்துவைத்து கழுவ தண்ணீர் அதிகம் செலவாகும்.
 • தானியங்கி துணி துவைக்கும் எந்திரங்களையும் பாத்திரங்கள் கழுவும் எந்திரங்களையும் அவைகளின் கொள்ளளவுக்கு உகந்த நீர் மட்டத்தை அடைந்தால் மட்டுமே துவக்க வேண்டும்.
 • முகச்சவரம் செய்யும் போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்தே வைத்திருந்து தண்ணீரை வீணே ஓட விடாதீர்கள். குவளையில் நீர் நிரப்பி முகம் கழுவுங்கள்.
 • சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சந்திக்கும் ஒரு சென்னை வாசி குளிக்கும்போது அந்த தண்ணீர் வீணாக கழிவுநீராக சென்றுவிடாமல், ஒரு பிளாஸ்டிக் தொட்டியின் உள்ளே நின்று கொண்டு குளிக்கிறார். குளித்த தண்ணீர் டாய்லெட் உபயோகத்திற்கு..
 • எந்த பைப் லீக் ஆனாலும் உடனே சரி செய்து கசிவை .சரி செய்யவும்
 • இன்னொரு சென்னைவாசி தனது வீட்டில் துணி துவைக்கும்போது, வீணாகும் தண்ணீரை சேகரித்து, பாத்திரம் கழுவவுதற்கும் டாய்லெட் உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறார்.
 • இது தவிர நாம் நமது வீட்டு தண்ணீர்க் குழாய்களை சரியாக மூடிவைப்பது, குழாய்களில் கசிவு ஏற்படும்போது உடனடியாக சரி செய்வதும் முக்கியமான சிக்கன நடவடிக்கை.
 • வாசல் தெளிக்க பூவாளியைப் பயன்படுத்தலாம்.
 • செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் நீர் மரங்களுக்கு ஊற்றலாம்
 • வீட்டு கழிவு நீரை மறுசுழற்சி வகையில் செடிகளுக்கு பாய்ச்சலாம்
 • பாரதத்தில் நீர் ஆதார மேலாண்மையில் ஐ.நா.தோள் கொடுக்க முன்வந்துள்ளது. நீர் ஆதார நிர்வாக மேம்பாட்டால் சமுதாயத்தில் சுபிட்சம் ஏற்படும், தொழில்திறன் கூடும். குழந்தைகள் உடல் நலனுக்கு நீர் மேலாண்மை மிக முக்கியம். காரணம், ஆண்டு தோறும் தண்ணீர் பற்றாக்குறையால் (௫ வயதுக்கு உட்பட்ட) 6,௦௦,௦௦௦ குழந்தைகள் இறந்து விடுவதாக ஆய்வில் தெரிகிறது.
 • இன்னொருவர் பல வருடங்களாக தனது கொல்லைப்புறத்தில் வைத்து குளிப்பதாகவும், குளித்த தண்ணீர் அங்குள்ள செடிகொடி மரங்களுக்கு பாய்வதால் தண்ணீர் சிக்கனமாவதாகவும் கூறுகிறார். தனது உடலில் உள்ள வியர்வையால் உண்டாகும் யூரியா போன்ற உப்புகள் செடிகொடிகளுக்கு நல்ல உரமாவதாகவும் சுவைபட விளக்கமளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *