“தடாகம் நடுவே பூத்துக் குலுங்கிய நிலையில் கருநீலக் குவளை மலர்கள். அருகில் பூத்துப் படர்ந்த அம்சமாய் செந்நிறத்தாமரை மலர்கள் தங்கள் அழுக்கை இக்குளத்தில் களைய மக்கள் அணி அணியாய் வருகை. அவர்கள் உதடுகளில் நமசிவாய மந்திரத்தின் ஒலி. எங்கள் பிரானான சிவனும், பார்வதியும் போல் இத்தகைய பின்னணியில் தடாகத்தின் தோற்றம் தெரிகிறது.
தாமரை மலர்கள் நிறைந்த இந்தத் தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலியெழுப்ப, நம் உள்ளமெல்லாம் பொங்க பாய்ந்து நீராடுவோம்,” எனத் தோழிகள் கூறுகின்றதாய் மணிவாசகர் இப்பாசுரத்தைக் கட்டமைத்துள்ளார். “இயற்கையே இறைவனையும் இறைவியையும் அடியார்களின் கண்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. மனமாகிற பொய்கையில் இவ்விருவரும் தங்கியிருப்பதை நாம் உணர வேண்டும்” என்பது பாடலின் சாரம்.