பாரத விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன், ஈரோடு, சென்னிமலையில் பிறந்தவர். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், ராமாயி என்பவரை மணந்தார். நெச வுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வேலை தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் பணியில் இணைந்தார்.
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். 1932ல் காந்தியடிகளால் அறிவிக்கப்பட்ட ‘சட்ட மறுப்பு இயக்கம்’ போராட்டத்தின் போது திருப்பூரில், தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் கையில் தேசியக் கொடியினை ஏந்தி, சென்றபோது போலிசாரால் தாக்கப்பட்டு கையில் பாரத தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
அவரது இறுதி ஊர்வலத்தில், பொதுமக்களும் ,தேசபக்தர்களும் திரளாக பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜகோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கினில் கலந்துகொண்டனர். குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு உதவிகளை செய்து வந்தார்.
1991ல் பாஜகவின் அகில பாரத தலைவர் முரளிமனோகர் ஜோஷி குமரி முதல் காஷ்மிர் வரை ஏக்தா யாத்திரை சென்றபோது ராமாயி அம்மையாரின் ஆசிகளை பெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று