லால் பகதூர் சாஸ்திரி

ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற கோஷத்தின் மூலம் தேசத்தின் பாதுகாப்புக்கும் வேளாண்மை வளர்ச்சிக்கும் ஒருசேர பாடுபட்டவர் சாஸ்திரி. நேருவின் மரணத்திற்கு பிறகு பிரதமாராக பொறுப்பேற்ற சாஸ்திரி, தேச வளர்சிக்கு அரும்பாடுபட்டார். பசுமைபுரட்சி, வெண்மை புரட்சிதிட்டங்கள் மூலம் உணவுப் பொருள், பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வழிவகை செய்தார். நமது எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தானை 22 நாள் போரில் துவம்சம் செய்தவர் சாஸ்திரி.

அதே சமயம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் நம்முடன் மோதலுக்கு தயாரானபோது அதனையும் எங்கள் ராணுவம் சமாளிக்கும் என்று வீரத்துடன் பதிலளித்தார். ஒருசமயம், சாஸ்திரியின் நண்பர் அவசர செலவுக்கு 50 ரூபாய் கடனாக கேட்டார். கட்சி வழங்கும் ரூ. 150 கொண்டு வாழ்க்கை நடத்தும் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி மறுத்தார். ‘எதற்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன்’ என்று சொல்லி மனைவியிடம் கேட்டார். அதற்கு சாஸ்திரியின் மனைவி தன்னிடம் ரூ. 25 உள்ளது என்று கொண்டு வந்து கொடுத்தார். அதனை நண்பருக்கு கொடுத்தனுப்பினார். பிறகு மனைவியிடம் ‘ஏது இவ்வளவு பணம்’ என்று கேட்டார். அதற்கு அவரின் துணைவியார் மாதாமாதம் தாங்கள் கொடுக்கும் பணத்தில் ரூ. 10 சேமித்ததாக சொன்னார். அடுத்த நாளே சாஸ்திரி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதி, தனக்கு இனிமேல் மாதம் ரூ. 140 போதுமானது, தனது மனைவி அதிலேயே குடும்பத்தை நடத்தும் திறன் பெற்றுள்ளார். எனவே எனது சம்பளத்தில் இருந்து ரூ. 10 குறைத்துக் கொள்ளவும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த அளவுக்கு நேர்மைக்கும்  எளிமைக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினம் இன்று