திருப்பதிக்கு ஏன்தான் இப்படி  ஒரு தலைவலியோ?

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் 108 திவ்யதேசங்களில் (வைஷ்ணவ திருத்தலங்களில்) ஒன்று. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு 17 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவை ஆந்திர பிரதேச அரசு நியமித்தது. அதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனிதாவும் இடம் பெற்றிருந்தார். ஒரு ஹிந்து கோயில் கமிட்டியில் கிறிஸ்தவரா? கடுமையான எதிர்ப்பு வந்தது. இப்போது அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்று செய்தி. ஆனால் கிறிஸ்தவ அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவரான சுதாகர் என்பவரை சந்திரபாபு நாயுடு அரசு திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவராகவே நியமித்திருக்கிறது. இதற்கிடையில் திருப்பதி கோயிலின் ஊழியர்களில் 43 பேர் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. பெயரை மட்டும் மாற்றாமல் ஹிந்து பெயர்களிலேயே இருந்து வருகிறார்கள். ஹிந்துக்களின் புனிதத் தலத்திற்கு ஆபத்து மேல் ஆபத்து. இன்னும் இருக்கிறது.

முன்பு ஆந்திர முதல்வராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜசேகர் ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பது பலருக்குத் தெரியாது. ஆம். அவர் பெயர் சாமுவேல் ராஜசேகர ரெட்டி. அவர் ஏழுமலைகளில் இரண்டு மட்டுமே தேவஸ்தானத்திற்குச் சொந்தம் என்றும் மற்றவை அரசுக்குச் சொந்தமானவை என்றும் தெரிவித்தார். அவரது அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவ மிஷினரிகள் மலைமீதே ஒரு சர்ச் கட்ட தீர்மானித்தார்கள். ஹிந்துக்களின் எழுச்சியால் அந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

தேவஸ்தானம் நடத்தும் ஒரு பெண்கள் கல்லூரியின் முதல்வராக ஒரு கிறிஸ்தவ பெண்மணி நியமிக்கப்பட்டார். அவர் வகுப்பறைகளில் இருந்த வெங்கடாசலபதி படங்களை அகற்றிவிட்டு ஏசுநாதர் படங்களை மாட்டினார். ஹிந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் மாற்றப்பட்டார். இப்போதும் சில நேரங்களில் திருப்பதி கோவிலுக்குச் செல்லும் பாதையில் கிறிஸ்தவ மத பிரச்சார துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கிறார்கள்.

இந்நிலை மாற நமது கோயில்கள் அரசின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற ஹிந்து இயக்கங்களில் கோரிக்கை எவ்வளவு பொருத்தமானது என்று புரிகிறதா?

 

Related Posts

ஆனந்த விகடனின் ஹிந்து விரோதம்... அன்புடையீர் வணக்கம். ஆனந்த விகடன் ஏப்ரல் 20, 2017 இதழில் இந்தியா மக்களுக்கா மதத்துக்கா?" என்ற தலைப்பில் ‘மீனாமயில்’ எழுதியதாக ஒரு கட்டுரை வெளிவந்து...
ஒரு லட்சம், ஒரே லட்சியம்!... அன்புடையீர் வணக்கம். * வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் ‘ஹே விளம்பி’ புத்தாண்டு வாழ்த்துக்கள். * கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தா செலுத்திய...
அஸ்தமனமாகட்டும் ஆணவக் கொலைகள்... அஸ்தமனமாகட்டும் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தர்மபுரி துவங்கி உடுமலைப்பேட்டை வரை ஆணவக் கொலை, கௌரவக் கொலை என்றெல்லாம் புதுப்புது பெயர்களில் கொலைகள் அரங...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *