தாய் மதத்திற்கு திரும்பிய கிறிஸ்துவர்

இது யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் #இயற்கையாக நடந்த அதிசயம்.

#ஜார்ஜ்’ பாரம்பரியமான ’சிரியன் ஆர்தடக்ஸ் கிருஸ்துவ’ குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே ’பைபிள்’ படிக்கவும், சர்சில் வழிபடவும் பழக்கப்படுத்தப்பட்டவர். ஆனால் அவருடைய ஆன்மிக்க தேடலுக்கு அதில் விடை கிடைக்கவில்லை. இதனால் #நிஜமான_ஆன்மீக அனுபவத்தை தேடி தனது பயணத்தை தொடங்கியபோது #சனாதன_தர்மம் அவரை தன்வசப்படுத்திக்கொண்டது.

இது யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இயற்கையாக நடந்த அதிசயம். தற்போது ஜார்ஜின் பெயர் சித்தார்த மோஹன அதிரோஹா.

ஜார்ஜ், சித்தார்த்தாக மாற என்ன காரணம்?

பகிர்ந்துக்கொண்டவை….!

🌿1. உங்களை பற்றி சொல்லுங்களேன்…

தாராளமாக! எனது பூர்வீகம் கேரளாவின் ’#கோட்டயம்’. நான் பிறந்தது பாரம்பரியமான சிரியன் ஆர்தடக்ஸ் கிருஸ்துவ குடும்பத்தில். எனக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் ஜார்ஜ் மேத்யூ. எனது அம்மா வழி தாத்தா ஒரு பாதிரியார்! இதனால் வீட்டில் தினமும் காலை – மாலையில் பைபிள் படித்து பிராத்தனை செய்வது கட்டாயம். மொத்தத்தில் கட்டுக்கோப்பான ஒரு கிருஸ்துவனாகவே வளர்க்கப்பட்டேன்.

எங்கள் குடும்பம் கேரளாவில் ’ஆதரவற்ற குழந்தைகள்’ இல்லத்தை நடத்தி வந்தனர். அவர்களோடு அதிக நேரம் செலவிடுவதிலேயே எனது குழந்தை பருவம் கழிந்தது. அப்போது நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். அந்த இல்லத்தில் #ஹிந்துக்குழந்தைகளும் இருந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அனைவருமே சர்சுக்கு செல்ல வேண்டும். கிருஸ்துவர் அல்லாதவர்கள் #கட்டாயம் ஏன் சர்ச்சுக்கு செல்ல வேண்டும்? என்பதுதான் சிறுவயதில் என் #மனதில் முதன்முதலில் எழுந்த கேள்வி!

🌿2. நீங்கள் பைபிள் படித்திருப்பதாக கூறுவதால் கேட்கிறோம், பைபிள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பைபிளில் பல விஷயங்கள் கூறப்பட்டிருந்தாலும், என்னுடைய ஆன்மிக தேடலுக்கு அது உதவவில்லை.

🌿3. நீங்கள் இப்படி சொல்வதன் காரணம் என்ன?

ஏற்கனவே சொன்னதுபோல எங்கள் வீட்டில் தினமும் பைபிள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. நாங்கள் வீட்டில் வைத்திருந்த பைபிள் ராஜா ஜேம்ஸின் பைபிள். முதல் பக்கத்திலேயே ராஜா ஜேம்ஸ் பற்றி அதில் கூறப்பட்டிருக்கும். அந்த புத்தகத்தை பார்க்கும்போதெல்லாம் இந்தியாவை சேர்ந்த எனக்கும், ஜேம்ஸுக்கும் என்ன #சம்மந்தம்? நான் ஏன் ஜேம்ஸை பற்றி படிக்க வேண்டும்? இதற்கும் #ஆன்மீகத்திற்கும் என்ன சம்மந்தம்? போன்ற கேள்விகள் என் மனதில் கொப்பளித்துக்கொண்டே இருக்கும்.

பைபிளின் வாசகங்களை நான் நன்கு கவனித்தால், நிறைய கருத்துகள் தற்போதைய சூழலுக்கு முற்றிலும் #பொருந்தாதவையாக இருக்கும். உதாரணமாக பைபிளின்படி கடவுள் மீது #பயம் கொள்வதுதான் ஞானத்தை அடைய முதல்படியாம்! எடுத்த எடுப்பிலேயே இப்படி சொல்லிவிட்டால், கடவுளுக்கு பயந்துக்கொண்டு யாரும் எந்த பகுத்தறிவு #கேள்வியும் கேட்க முடியாது அல்லவா?

#அன்பான_ரட்சகராக சொல்லப்படும் கடவுள், மனிதன் தன்னை பார்த்து பயப்படுவதை ஏன் விரும்ப வேண்டும்? இப்படி பைபிள் பற்றி பைபிளை விட என்னிடம் கேள்விகள் அதிகம். அதனால்தான் அப்படிக்கூறினேன்.

🌿4. பைபிளில் சந்தேகம் இருந்தால் அதை கிருஸ்துவ #மதபோதகர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டிருக்கலாமே?

கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களா? பைபிளில் எனது சந்தேகங்களை நிறைய முறை பாதிரியார்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த பதில் ஒன்றுதான்! ‘நீ திரும்ப போய் ஆழமாக பைபிளை படி!’ என்பதுதான் அந்த பதில்.

🌿5. கிருஸ்துவ மதத்திலிருந்த நீங்கள் ஹிந்து மதத்தை நோக்கி திரும்ப என்ன காரணம்?

எனது குடும்பம் மிஞ்சிப்போனால் 200 #வருடங்கள் #கிருஸ்துவத்தை பின்பற்றியிருக்கலாம். எனது #எள்ளுத்தாத்தா கிருஸ்துவராக #மதம்_மாறியவர். ஆனால் அவருக்கும் முன்பு 2000 வருடங்களுக்கும் மேலாக எனது மூதாதையர்கள் ஹிந்து மதத்தை மட்டுமே பின்பற்றிவந்தவர்கள். மதம் மாறினாலும் #மரபணு மாறாதே? அந்த மரபணுவின் #ஆற்றல்தான் என்னை ஹிந்து மதம் நோக்கி ஈர்த்தது.

🌿6. ஹிந்து மதத்தை பின்பற்றிய அனுபவத்தை பகிர முடியுமா?

எனது இளம் வயதில் முதன்முதலாக #கோயிலுக்குள் சென்றேன். அதுவரையில் சர்சுக்கு மட்டுமே சென்று பழக்கப்பட்ட எனக்கு அது புது அனுபவம். உள்ளே நுழைந்ததுமே மனதில் ஒரு #பரவசம்.
#தீபங்களின் வெளிச்சமும், மந்திரங்களின் ஒலியும் மனதிற்கு மிகுந்த #அமைதியை அளித்தன. அதுவரை நான் தேடிவந்த ஆன்மீக அனுபவம் அதுதான். அதைத்தொடர்ந்து நான் அடிக்கடி கோயிலுக்கு செல்லத்தொடங்கினேன். எனது உறவினர் ஒருவர் கிருஸ்துவர். ஆனால் மாதா அமிர்தானந்தமயை பின்பற்றுபவர். அவர் எனக்கு எளிமையான #தியான பயிற்சிகளை கற்றுத்தந்தார். மேலும் ஓஷோவின் வகுப்புகளுக்கும் சென்றுவந்தேன். இவையெல்லாம் எனக்கு ஆன்மீகத்தை பற்றிய ஒரு புது பரிமாணத்தை காட்டின.

🌿7. உங்கள் அனுபவத்தை தாண்டி ஹிந்து மதத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஹிந்து மதம் வெறும் மதமல்ல. அது ஒரு #விஞ்ஞானம். பிரபல எழுத்தாளர் ராஜிவ் மல்கோத்ரா கூட தனது வீடியோகளில் இதை விளக்கி வருகிறார். நானும் எனது தனிப்பட்ட அனுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் நிஜமாலுமே நமது மனதின் எண்ண ஓட்டம் மாறுபடுகிறது. அந்த நாட்களில் நமது தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை கட்டுப்படுத்தினால் நிச்சயம் மனதில் #நல்ல_மாற்றம் ஏற்படுவதை ஒருவரால் உணர முடியும்.

🌿8. மதமாற்றம் பற்றிய உங்கள் பார்வை என்ன??

பொதுவில் ஆன்மீகத்தை பற்றியோ, ஆழமான சமய அறிவோ பாதிரியார்களுக்கே கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் மக்களை மதம் மாற்றும்போது அங்கே நிகழ்வது வெறும் அடையாள_அழிப்பு மட்டுமே. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கங்கள் காணாமல் போய்விடும். இதனால் தாங்களின் அடையாளம் என்ன என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட மக்களை யார் வேண்டுமானாலும் தங்கள் கைப்பாவைகளாக்கிக்கொண்டு சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கேரளாவில் கேந்திரிய வித்யாலயாவில் பாரம்பரியமாக ’அசதோமா சத்கமய’ மற்றும் ’சஹனாவவது’ போன்ற ஸ்லோகங்கள் சொல்லுவது வழக்கம். இது மத சம்மந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க உலக நலனை மனதில் கொண்டு சொல்லப்படும் ஸ்லோகங்கள் இவை. ஆனால் அவற்றிற்கு மதசாயம் பூசிவிட்டனர். சுலோகங்கள் சொல்ல தடை விதிக்ககோரி போராட்டமும் நடந்துக்கொண்டிருக்கிறது. மதமாற்றம் நம்மை எங்கே அழைத்துச்சென்றுக்கொண்டிருக்கிறது என்று புரிகிறதா?

🌿9. கிருஸ்துவ மதத்திலும் மேரிக்கு தேர் இழுக்கிறார்கள், கொடி மரம் கட்டுகிறார்கள், விளக்கு ஏற்றுகிறார்கள், பாத யாத்திரை செல்கிறார்கள். இதன்படி மதம் மாறினாலும் கலாச்சாரம் அழியாமல்தானே உள்ளது?

இங்குதான் தவறு செய்கிறீர்கள். நூறு நூறு ஆண்டுகளாக முயற்சி செய்தும், கிருஸ்துவர்களால் நம்மை மதம் மாற்ற முடியவில்லை. அதற்கு காரணம் ஹிந்து மதம் என்பது வெறும் இறைவழிபாடு மட்டுமல்ல. வாழ்வியல் கலந்த ஒரு கலாச்சாரம். அதனால் அந்த கலாச்சாரத்தை திருடி, கிருஸ்துவ மதத்தில் புகுத்தி மதம் மாற்ற சதி செய்து வருகிறார்கள். இது நிரந்தரம் கிடையாது. கொஞ்ச நாட்களுக்கு இதுப்போன்ற கூத்துகள் நடைபெறும். பிறகு பைபிள் மட்டும்தான் புனித நூல், ஏசுதான் ரட்சகர் என்று பழை கதைக்கு திரும்பிவிடுவார்கள்.

ஆக மதமும் மாற்றி, கலாச்சாரத்தையும் காலி செய்வதுதான் அவர்களின் திட்டம். இதற்கு உதாரணம் எங்கள் குடும்பம். என் எள்ளு தாத்தா ஒரு ஹிந்து. அவரிடம் கிருஸ்துவர்கள் நீங்கள் ராமாயணம், மகாபாரதம் படிக்கலாம். கூடவே பைபிளையும் படியுங்கள் என்று கொடுத்தார்கள். கொஞ்ச நாட்களில் அவரிடமிருந்து ராமாயணம் பறிக்கப்பட்டது. அப்புறம் மகாபாரதமும். பிறகு நிரந்தரமாக அவர் கையில் பைபிள் தவழத்தொடங்கியது. நாங்கள் முழு கிருஸ்துவ குடும்பமாக மாறிவிட்டோம். நல்லவேளையாக நான் ஹிந்து மதத்திற்கு திரும்பிவிட்டேன். ஆனால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

10. தாய் மதம் திரும்ப நினைப்பவர்களுக்கு நீங்கள் கூறும் விஷயம்?

தாமதிக்காமல் உடனடியாக தாய்மதம் திரும்பலாம். இன்று பல கிருஸ்துவர்கள் வேறு வழியில்லாமல், #வேண்டா_வெறுப்பாகவே சர்சுக்கு செல்கின்றனர். பலர் மீண்டும் ஹிந்துவாக மாறுவதற்கு ஏங்கி வருகின்றனர்.

ஹிந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு உதவினால் கிறிஸ்தவ மக்கள் ஹிந்து மதத்திற்கு திரும்புவார்கள் என்பது உறுதி!

Source : www.missionkaali.org

One thought on “தாய் மதத்திற்கு திரும்பிய கிறிஸ்துவர்

  1. மதம் மாறிய குடும்பங்களை நாம் திருப்பி அவர்களை கொண்டு வர வேண்டும். பலர் நாம் சென்று அழைத்தால், கண்டிப்பாக வருவார்கள். பல இந்து மத இயக்கம் தொண்டு செய்து கொண்டு வருகிறது. தமிழ் நாட்டில், பல வருடங்களாக செய்து வருகிற சேவையினால், தமிழ்நாடு மாநிலத்தில் கண்டிப்பாக இந்து விழிப்புணர்வு மீண்டும் பரவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *